Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தளபதி 68 படத்தில் இணைந்த வெங்கட்பிரபுவின் ஆஸ்தான நடிகர்!

Webdunia
சனி, 23 டிசம்பர் 2023 (14:23 IST)
நடிகர் விஜய், தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் ’தளபதி 68’ என்று தற்காலிகமாக அழைக்கப்பட்டு வரும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவரோடு பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி, ஜெயராம் மற்றும் மோகன் ஆகியோர் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்து வருகிறார். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்த படத்தின்  ஷூட்டிங் சென்னை மற்றும் தாய்லாந்து ஆகிய இடங்களில் நடந்தது. தற்போது ஐதராபாத்தில் முக்கியமானக் காட்சிகளை படமாக்கி வருகிறார் இயக்குனர் வெங்கட் பிரபு. இந்த படத்துக்கு ‘பாஸ்’ அல்லது ‘பஸ்ஸில்” என தலைப்பு வைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அதை தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி மறுத்துள்ளார்.

இந்நிலையில் இந்த படத்தில் ஒரு வேடத்தில் நடிப்பதை பிரபல நடிகர் வைபவ் அறிவித்துள்ளார். இது சம்மந்தமான அவரது பதிவில் “பெரிதும் எதிர்பார்க்கப்படும் ஒரு படமான தளபதி 68-ல் இணைவதால் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த வாய்ப்பை அளித்த இயக்குனர் வெங்கட் பிரபுவுக்கு நன்றி. தளபதி விஜய்யோடு திரையைப் பகிர்ந்து கொள்வதில் மிகவும் பெருமையாக நினைக்கிறேன்” எனக் கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கேம்சேஞர் படத்தால் பெரிய நட்டம்… தயாரிப்பாளருக்குக் கைகொடுக்கும் ராம்சரண்!

இயக்குனர் ராம் & மிர்ச்சி சிவா இணையும் ‘பறந்து போ’… சர்வதேச திரைப்பட விழாவுக்குத் தேர்வு!

துபாயை அடுத்து ஐரோப்பிய கார் பந்தயத்திலும் அஜித் சாதனை.. முதல் சுற்றில் வெற்றி..!

ஓடிடி யில் ரிலீஸானது விடுதலை 2.. கடைசி நேரத்தில் நடந்த மாற்றம்!

பிக்பாஸ் டைட்டில் வின்னர் முத்துக்குமரன்.. 2வது பெற்ற செளந்தர்யா..!

அடுத்த கட்டுரையில்
Show comments