Webdunia - Bharat's app for daily news and videos

Install App

"தளபதி 63" வேற லெவல் அப்டேட் ! விஜய்க்கு வில்லனாக ஷாருக்கான்!

Webdunia
செவ்வாய், 14 மே 2019 (19:10 IST)
தமிழ் சினிமாவில் ரசிகர்களின் முடிசூடா மன்னனாக திகழும் தளபதி விஜய் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான ‘சர்கார்’ படத்தைத் தொடர்ந்து அட்லி கூட்டணியில்  தெறி, மெர்சல் வெற்றிக்கு பிறகு மூன்றாவது முறையாக  'தளபதி 63' படத்திற்காக இணைந்துள்ளனர்.


 
விஜய்க்கு ஜோடியாக  நயன்தாரா நடிக்கும்  இப்படத்தில்  கதிர், யோகிபாபு டேனியல் பாலாஜி உள்ளிட்டோர்  நடிக்கிறார்கள். மேலும், இப்படத்தில் வில்லனாக பிரபல பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப் நடிக்கவுள்ளார்.
 
விளையாட்டை மையப்படுத்தி உருவாகிவரும் இந்த படத்தில் நடிகர் விஜய் ஒரு கால்பந்து பயிற்சியாளராக நடிக்கிறார் என்றும், மேலும், விஜய் தமிழ்நாடு மகளிர் கால்பந்து அணியின் பயிற்சியாளராக இருப்பார் என தகவல் வெளிவந்தது. இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகள் படு மும்மரமாக நடந்து வருகிறது. 
 
இதற்கிடையில் அண்மையில்  ஐபிஎல் போட்டியின் போது அட்லீ மற்றும்  ஷாருக் கான் ஒன்றாக அமர்ந்திருந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பெரும் வைரலானது. மேலும் நடிகர் ஷாருக்கான் அட்லீயை அவரது அலுவலகத்தில் சென்று சந்தித்தார். இதனால் ஷாருக்கான் தளபதி 63 படத்தில் நடிக்க வைக்கத்தான் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது என தகவல்கள் வேகமாக பரவியது. 
 
இந்நிலையில் தற்போது அதனை உறுதிப்படுத்தும் விதத்தில் ஷாருக்கான் இப்படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது 


 
தளபதி 63 க்ளைமாக்ஸ் காட்சியில் கடைசி  15 நிமிஷம் மட்டும் நடிச்சுக் கொடுத்தா போதும்' என்று அட்லீ அவரிடம் கேட்டதற்கு சடாரென்று ஓகே சொல்லிவிட்டாராம் ஷாரூக் கான். எனவே விஜய், ஷாரூக் கான் மோதவிருக்கும் க்ளைமாக்ஸ் காட்சியை சென்னையில் உள்ள ஸ்டேடியத்திலோ அல்லது  மும்பையில் உள்ள ஸ்டேடியத்திலோ படமாக்க முடிவெடுத்து உள்ளனர். 
 
இதற்காக 5 நாட்கள் கால்ஷீட் ஒதுக்கியுள்ள ஷாரூக் கானின் சம்பளம்  'தளபதி 63' படத்தின் இந்தி மற்றும் வடமாநில அனைத்து மொழிகளின் உரிமையையும் ஷாரூக் கானுக்கு சம்பளமாகத் தர சம்மதித்து இருக்கிறார்களாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நடிகையை ஏமாற்றியதாக வழக்கு: ‘காதல்’ பட நடிகர் சுகுமார் மீது வழக்குப்பதிவு..!

’தக்லைஃப்’ படத்தில் சிம்பு தான் ஹீரோ.. கமல் சிறப்பு தோற்றம் தான்.. பிரபலம் கூறிய தகவல்..!

மாடர்ன் உடையில் ஸ்டைலான போஸில் ஜொலிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்!

கிளாமர் உடையில் ஹோம்லி நாயகி பிரியங்கா மோகன்… கார்ஜியஸ் புகைப்படத் தொகுப்பு!

பெல்ஜியம் கார் ரேஸ் பயிற்சியின் போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித்!

அடுத்த கட்டுரையில்
Show comments