இனிமேல் நாம வாழ்க்கை முழுவதும் இப்படித்தான் இருக்க போகுதா.. லியோ டிரைலர்.

Webdunia
வியாழன், 5 அக்டோபர் 2023 (18:51 IST)
தளபதி விஜய் நடித்த லியோ திரைப்படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்த ட்ரைலரை விஜய் ரசிகர்கள் பார்த்து சமூக வலைதளத்தில் தங்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

விஜயின் அதிரடி ஆக்சன் காட்சிகள், சஞ்சய்தத்,  மிஷ்கின், அர்ஜுன் வில்லத்தனமான காட்சிகள், திரிஷாவின் காட்சிகள், அனிருத்தின் பின்னணி, லோகேஷின் இயக்கம் என அனைத்து பாசிட்டிவ்களும் இந்த ட்ரெய்லரில் இணைந்து இருப்பதை பார்க்கும் போது இந்த படம் மிகப்பெரிய ஆக்சன் விருந்து அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இந்த ட்ரெய்லர்கள் இடம் பெற்ற வசனங்கள் அட்டகாசமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அவன் இந்த ஊரை ஏமாற்றலாம், உலகத்தை ஏமாற்றலாம்,  ஆனால் என்னை ஏமாற்ற முடியாது என்ற சஞ்சய் தத்தின் வசனம், ’இவனுங்க நிறுத்த போறது இல்ல, ஈசல் கூட்டம் மாதிரி உன்னை தேடி வந்துகிட்டே தான் இருப்பாங்க,  நீ இங்கே இருக்க கூடாது, நீ இங்கே இருக்க இருக்க உனக்கு தான் ஆபத்து’  என்ற கௌதம் மேனன் வசனம், இனிமேல் நாம வாழ்க்கை முழுவதும் இப்படித்தான் இருக்க போகுதா,  ஓடணும், பயந்து பயந்து சாகனும்,  இப்படித்தான் நம்ம வாழ்க்கையா என்ற த்ரிஷாவின் வசனமும் இந்த ட்ரெய்லர்கள் இடம் பெற்றுள்ளது

மொத்தத்தில் லியோ திரைப்படத்தின் டிரைலர் இந்த படத்தை மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்க வைத்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது


Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

எம்ஜிஆரையே எதிர்த்து கேள்வி கேட்டவரு மகேந்திரன்.. அவர பத்தி ராஜகுமாரனுக்கு என்ன தெரியும்?

நிதி அகர்வாலின் கண்கவர் புகைப்படத் தொகுப்பு!

யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

டியூட் படத்தில் இருந்து ‘கருத்த மச்சான்’ பாடலை நீக்கவேண்டும்… சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

இந்தி படத்துக்காக மூன்று மடங்கு சம்பளத்தைக் குறைத்துக் கொண்டாரா தனுஷ்?

அடுத்த கட்டுரையில்
Show comments