Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை பின்னணி, துப்பாக்கி 2’ டைட்டில்: ‘தளபதி 65’ படம் குறித்த ஆச்சரிய தகவல்கள்

Webdunia
வெள்ளி, 21 ஆகஸ்ட் 2020 (21:15 IST)
தளபதி விஜய் நடிப்பில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்க இருக்கும் திரைப்படத்தை பிரபல இயக்குநர் ஏஆர் முருகதாஸ் அவர்கள் இயக்க உள்ளார் என்பதும் இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு நாளை வெளிவர இருப்பதாக செய்திகள் வெளிவந்தது என்பதும் தெரிந்ததே 
 
இந்த நிலையில் நாளை காலை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த படம் குறித்த ஒரு வீடியோ கிளிப்பை வெளியிட இருப்பதாகவும் ஆனால் அதில் டைட்டில் குறித்து அறிவிப்பு இருக்காது என்றும் கூறப்படுகிறது
 
இந்த படத்தின் டைட்டில் ’துப்பாக்கி-2’ என வைக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் மற்றும் ஏஆர் முருகதாஸ் விரும்பியதாகவும், ஆனால் கலைப்புலி தாணு அவர்கள் அந்த டைட்டிலை தரமுடியாது என உறுதியாக கூறிவிட்டதால் டைட்டில் அறிவிப்பு ஒத்தி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது 
 
பரபரப்பான அரசியல் கருத்துக்களுடன், அரசியல் காட்சிகள் கொண்ட இந்த திரைப்படம் முழுக்க முழுக்க சென்னையின் பின்னணியில் உருவாக இருப்பதாகவும் இதனால் இந்த படத்தின் படப்பிடிப்பு 90% சென்னையிலேயே படமாக்க உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது
 
சந்தோஷ் நாராயணன் ஒளிப்பதிவில் தமன் இசையில் உருவாகும் இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது 

தொடர்புடைய செய்திகள்

நடிகர் பிரபாஸ்-க்கு திருமணமா? இன்ஸ்டாகிராம் ஸ்டோரியால் பரபரப்பு..!

பாத்தீங்காளா பாஜக சாதனைகளை? வீடியோ போட்ட ராஷ்மிகா! – வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்!

'P T சார்' படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு

எம்.ஜி.ஆர் படத்திற்கு பாடல் எழுதவில்லையே என்ற கலைக்குறை தீர்ந்தது: வைரமுத்து

மதுரையில் பெய்த கனமழை.. வீட்டின் மேற்கூரை இடிந்து இளைஞர் பலி..!

அடுத்த கட்டுரையில்
Show comments