'தளபதி 64’ தயாரிப்பு நிறுவனம் மாறுகிறதா?

Webdunia
ஞாயிறு, 13 அக்டோபர் 2019 (20:57 IST)
விஜய் நடித்த ‘பிகில்’ திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாகவிருக்கும் நிலையில் தற்போது அவர் ‘தளபதி 64’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தை விஜய்யின் உறவினர் சேவியர் பிரிட்டோ என்பவர் தயாரித்து வருகிறார்.
 
இந்த நிலையில் இந்த படத்தின் தயாரிப்பாளர் மாறவிருப்பதாகவும், தயாரிப்பு பணியில் இருந்து சேவியர் பிரிட்டோ விலகிக்கொள்ள இருப்பதாகவும் ஒரு வதந்தி மிக வேகமாக சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
 
ஆனால் இந்த தகவலை சேவியர் பிரிட்டோ மறுத்துள்ளார். இந்த தகவல் முழுக்க முழுக்க வதந்தி என்றும் இதுபோன்ற உறுதி செய்யப்படாத தகவலை யாரும் நம்ப வேண்டாம் என்றும், ‘தளபதி 64’ படத்தின் படப்பிடிப்பு எந்தவித பிரச்சனையும் இன்றி நடைபெற்று வருவதாகவும் இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடையவிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
 
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும்  'தளபதி 64' படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்து வருகிறார். விஜய் சேதுபதி வில்லனாகவும், சாந்தனு, ஆண்டனி வர்கீஸ் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களிலும் நடித்து வருகின்றனர். அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

Thalaivar 173: சுந்தர்.சிக்கு டபுள் சேலரி!.. ரஜினி படத்தின் மொத்த பட்ஜெட் இவ்வளவு கோடியா?..

விஜயின் பாடும் கடைசி பாடல்.. ‘ஜனநாயகனின்’ ஃபர்ஸ்ட் சிங்கிள் எப்படி வந்துருக்கு தெரியுமா?

SSMB29: ராஜமௌலி - மகேஷ்பாபு படத்தில் வில்லனாக பிருத்திவிராஜ்!.. போஸ்டரே டெரரா இருக்கே!..

சுந்தர்.சியின் திரையுலக பயணம்.. ரஜினி 173ல் எப்படி வொர்க் அவுட் ஆகப் போகிறது?

ஜர்னலிசத்தை சாக்கடைக்கு கொண்டு செல்கிறார்கள்! - கவுரி கிஷன் விவகாரத்தில் குஷ்பூ ஆவேசம்!

அடுத்த கட்டுரையில்
Show comments