Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு அப்டேட் கேட்ட ரசிகர்களுக்கு இரட்டை விருந்து கொடுத்த அர்ச்சனா கல்பாதி

Webdunia
புதன், 19 ஜூன் 2019 (18:29 IST)
விஜய்யின் பிறந்த நாள் வரும் 22ஆம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில் கடந்த ஒரு வாரமாக விஜய் ரசிகர்கள், 'தளபதி 63' படத்தின் அப்டேட்டை தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாதியிடம் கேட்டுக்கொண்டே வந்தனர். ஒருவழியாக இன்று மாலை 6 மணிக்கு 'தளபதி 63' படம் குறித்த அப்டேட் தருவதாக அர்ச்சனா தனது டுவிட்டரில் தெரிவித்திருந்தார்
 
அதன்படி சொன்னபடியே சரியாக 6 மணிக்கு அர்ச்சனா கல்பாதி தனது டுவிட்டர் பக்கத்தில் தளபதி 63' படம் குறித்த அப்டேட்டை கொடுத்துள்ளார். ரசிகர்கள் கேட்டது ஒரு அப்டேட் தான். ஆனால் இன்ப அதிர்ச்சியாக அவர் இரண்டு அப்டேட் கொடுத்துள்ளார். இதன்படி 'தளபதி 63' படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் வரும் 21ஆம் தேதி மாலை 6 ம்ணிக்கு வெளியாகவிருப்பதாகவும், அதற்கு மறுநாள் அதாவது விஜய்யின் பிறந்த நாளான ஜூன் 22ஆம் தேதி அதிகாலை 12 மணிக்கு இந்த படத்தின் இரண்டாம்லுக் வெளியாகவிருப்பதாகவும் அர்ச்சனா கல்பாதி அறிவித்துள்ளார்.
 
அர்ச்சனா கல்பாதியின் இந்த அறிவிப்பை அடுத்து தளபதியின் ரசிகர்கள் இரட்டை சந்தோஷம் அடைந்துள்ளனர். இந்த அப்டேட் வந்த சில நிமிடங்களில் இணையதளங்களை விஜய் ரசிகர்கள் தெறிக்க வைத்து கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’எம்புரான்’ படத்திற்கு தடை.. கேரள ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்த பாஜக..!

கவர்ச்சி உடையில் அழகுப் பதுமையாக ஜொலிக்கும் மாளவிகா மோகனன்… கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

திஷா பதானியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

விக்ரம்மின் ‘வீர தீர சூரன்’ 5 நாள் வசூல் எவ்வளவு?.. வெளியான தகவல்!

ஆண்கள் எல்லாம் அழிஞ்சு போங்க.. நாசமா போங்க.. பாடகி சின்மயி சாபம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments