Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'காக்கா கழுகு’ பிரச்சனை இப்போதைக்கு முடியாதா? ‘தலைவர் 171’ படத்தின் டைட்டில் இதுதானாம்..!

Siva
திங்கள், 1 ஏப்ரல் 2024 (07:04 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் திரைப்படத்தின் டைட்டில் டீசர் ஏப்ரல் 22ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தின் டைட்டில் தற்போது கசிந்து இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திரைப்பட விழா ஒன்றில் காக்கா கழுகு கதை சொன்னார் என்பதும் அதற்கு பதிலடியாக விஜய் ’லியோ’ படத்தின் வெற்றி விழாவில் ஒரு கதை சொன்னதை அடுத்து இரு தரப்பு ரசிகர்களுக்கும் இடையே சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சை எழுந்தது.

அந்த சர்ச்சை கிட்டத்தட்ட முடிந்து விட்டது என்று எண்ணிக் கொண்டிருக்கும் நிலையில் தான் தற்போது திடீரென ’தலைவர் 171’ படத்திற்கு ’கழுகு’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து ஃபேன்மேட் போஸ்டர்கள் இணையத்தில் வைரல் ஆகி வருவதை அடுத்து மீண்டும் ரஜினி மற்றும் விஜய் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

விஜய் இன்னும் ஒரே ஒரு படத்தில் நடித்துவிட்டு அரசியலுக்கு செல்ல இருப்பதால் ரஜினி ரசிகர்களை பகைத்துக் கொள்ள மாட்டார் என்று கூறப்பட்டாலும் காக்கா கழுகு கதை பிரச்சனை இப்போதைக்கு விடாது போல் தெரிவதால் ரசிகர்கள் மத்தியில் மோதல் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.


Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஐஸ்வர்யா லஷ்மியின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கேரளா புடவையில் அம்சமான போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!

சண்முக பாண்டியன் நடிக்கும் படை தலைவன் டிரைலரில் விஜயகாந்த்.. ரமணா ரெஃபரன்ஸ்..!

என் மனைவிக்கு இறந்ததற்கு அல்லு அர்ஜுன் காரணம் இல்லை… இறந்த பெண்ணின் கனவர் கருத்து!

இறந்தவர் குடும்பத்துக்கு எல்லாவகையிலும் துணையாக இருப்பேன்… ஜாமீனில் வெளிவந்த பின் அல்லு அர்ஜுன் பேட்டி!

அடுத்த கட்டுரையில்
Show comments