Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தலைவர் 166 பட ஹீரோயின் நயன்தாரா! - அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Webdunia
திங்கள், 8 ஏப்ரல் 2019 (12:53 IST)
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் தலைவர் 166 படத்தின் கதாநாயகி நயன்தாரா என்ற அதிகாரபூர்வ அறிவிப்பு சற்றுமுன் வெளியாகியுள்ளது. 
பேட்ட படத்தின் வெற்றியை தொடர்ந்து ரஜினிகாந்த் அடுத்ததாக ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் அரசியில் கலந்த மசாலா படத்தில் நடிக்கவிருக்கிறார். இது ரஜினியின் கேரியரில் 166 -வது படமாக உருவாகவிருக்கிறது. 
 
பிரமாண்ட தயாரிப்பு நிறுவனமான லைகா ப்ரொடக்ஷன் தயாரிக்கும் இப்படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கிறார்.  சந்தோஷ் சிவன் ஒளிப்பதிபதிவு செய்யும்  இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் 10-ம் தேதி மும்பையில் துவங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப்படத்தில் ரஜினியின் மகளாக நிவேதா தாமஸ் , வில்லன் கதாபாத்திரத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியது. இப்படத்தை பற்றிய அதிகாரபூர்வ தகவல்களும் இன்னும் வெளிவரவில்லை இருந்தாலும் படத்தை பற்றின அப்டேட்ஸ் வந்தவண்ணமாகவே உள்ளது.

இந்நிலையில் தற்போது இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கமளித்திருக்கும் மக்கள் தொடர்பாளர் ரியாஸ் அஹமது, “தற்போது வரை தலைவர் 166 படத்தின் நாயகியாக நயன்தாரா மட்டுமே தேர்வாகியுள்ளார். படக்குழு குறித்து வெளியான மற்ற தகவல்கள் தவறானவை எனவே அதிகாரப்பூர்வமற்ற தகவல்களை பரப்ப வேண்டாம்” என்றும் அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

'P T சார்' படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு

எம்.ஜி.ஆர் படத்திற்கு பாடல் எழுதவில்லையே என்ற கலைக்குறை தீர்ந்தது: வைரமுத்து

மதுரையில் பெய்த கனமழை.. வீட்டின் மேற்கூரை இடிந்து இளைஞர் பலி..!

விஜய்க்காக அரசியல் கதையை எழுதிவரும் ஹெச் வினோத்!

அடுத்தடுத்து சூப்பர் ஸ்டார்களை இயக்கும் முருகதாஸ்… பேன் இந்தியா நடிகரோடு கூட்டணி!

அடுத்த கட்டுரையில்
Show comments