Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கமல் ஓர் அற்புதமான கலைஞர் - தெலுங்கு உத்தம வில்லன் விழாவில் எஸ்.பி.பி.

கமல் ஓர் அற்புதமான கலைஞர் - தெலுங்கு உத்தம வில்லன் விழாவில் எஸ்.பி.பி.
, திங்கள், 30 மார்ச் 2015 (10:03 IST)
கமல் இரு வேடங்களில் நடித்துள்ள உத்தம வில்லன் படம் தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் வெளியாகிறது. தமிழ்ப் பதிப்பின் இசை வெளியீட்டு விழா சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் பிரமாண்டமாக நடந்தது. தெலுங்குப் பதிப்பின் இசை வெளியீட்டு விழா ஹைதராபாத்தில் நடந்தது.
 

 
பிரமாண்டமாக நடந்த இந்த விழாவில் நடிகர் கமல், இயக்குனர் ரமேஷ் அரவிந்த், நடிகைகள் பூஜா குமார், ஆண்ட்ரியா, கமலின் மகள் ஸ்ருதி, கௌதமி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
 
விழாவில் பேசிய கௌதமி, அன்றும் இன்றும் என்றும் எனக்கு விருப்பமான ஒரே நடிகர் கமல் மட்டுமே என்றார். சிறப்பு அழைப்பாளராக பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கலந்து கொண்டு பேசினார்.
 
கமல் ஓர் அற்புதமான கலைஞர். அவரது 120 படங்களுக்கு மேல் நான் தெலுங்கில் டப்பிங் பேசியுள்ளேன். என்னை அண்ணா என்று அழைக்கும் மனதுக்கினிய நண்பர்களில் கமலும் ஒருவர். கமலிடமும், பாலசந்தரிடமும் கற்றுக் கொள்ள வேண்டியவை ஏராளம் உள்ளது என்றார்.
 
உத்தம வில்லன் ஏப்ரல் 10 திரைக்கு வரும் என கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil