திருஷ்யம் 2 தெலுங்கு ரீமேக்… அடுத்த அப்டேட்டை வெளியிட்ட இயக்குனர்!

Webdunia
திங்கள், 1 மார்ச் 2021 (15:47 IST)
தெலுங்கு த்ருஷ்யம் படத்தின் இரண்டாம் பாகத்துக்கான ஷூட்டிங் தொடங்கும் தேதியை ஜீத்து ஜோசப் வெளியிட்டுள்ளார்.

2015 ஆம் ஆண்டு வெளியான திருஷ்யம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதுமட்டுமில்லாமல் தமிழ், தெலுங்கு , கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. இதில் இந்தியைத் தவிர மற்ற மொழிகளில் எல்லாம் பிரம்மாண்ட வெற்றியை பெற்றது. இந்நிலையில் இப்போது 5 ஆண்டுகளுக்குப் பிறகு மோகன்லால் நடிக்க ஜீத்து ஜோசப்பே இயக்கி நேரடியாக அமேசான் ப்ரைம் தளத்தில் பிப்ரவரி 19 ஆம் தேதி வெளியானது. வெளியானதில் இருந்து நேர்மறையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

இந்நிலையில் அந்த படத்தின் தெலுங்கு ரீமேக் பணிகளை உடனே தொடங்கியுள்ளார் இயக்குனர். இதையடுத்து இன்று அந்த படத்தின் பூஜை தொடங்கியுள்ளது. மேலும் படப்பிடிப்பு மார்ச் 5 ஆம் தேதி முதல் நடக்க உள்ளதாகவும் அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இப்படி கத்திக்கிட்டே இருந்தா.. யாரு ஷோ பாப்பாங்க? - பிக்பாஸ் வீட்டாரை கிழித்தெடுத்த விஜய் சேதுபதி!

சுருள்முடி அழகி அனுபமாவின் அழகிய புகைப்படத் தொகுப்பு!

பிரியங்கா மோகனின் க்யூட் வைரல் க்ளிக்ஸ்!

கைவிடப்பட்டதாக பரவிய வதந்தி… போஸ்டரோடு வெளியான பிரபுதேவா & வடிவேலு இணையும் படம்!

பிரபாஸின் அடுத்த பேன் இந்தியா படம் ‘ஸ்பிரிட்’… 100 நாட்களுக்குள் முடிக்கத் திட்டம்!

அடுத்த கட்டுரையில்
Show comments