ஆர்யா சாயிஷா தம்பதியின் சந்தோசமான அறிவிப்பு: ரசிகர்கள் குஷி

Webdunia
திங்கள், 9 டிசம்பர் 2019 (22:31 IST)
நடிகர் ஆர்யா மற்றும் நடிகை சாயிஷா சமீபத்தில் திருமணம் செய்தார்கள் என்பதும் இந்த புதுமண தம்பதிகள் இணைந்து ’டெடி’ என்ற படத்தில் நடித்து வருகின்றனர் என்பதும் தெரிந்ததே
 
இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று முன்தினம் முடிவடைந்தது. இதனையடுத்து படக்குழுவினரும் இதனை கொண்டாடினார் 
 
இந்த நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை மாலை 6 மணிக்கு வெளியாக இருப்பதாக ஆர்யா மற்றும் சாயிசா இணைந்து அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பால் அவர்களது ரசிகர்கள் குஷியாகியுள்ளனர்.
 
ஆர்யா மற்றும் சாயிஷா ஏற்கனவே சூர்யாவின் ’காப்பான்’ படத்தில் நடித்திருந்தாலும் இந்தப் படத்தில்தான் முதன்முதலாக ஜோடியாக இணைந்து நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
வரும் பிப்ரவரியில் காதலர் தினத்தன்று வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் இதனையடுத்து போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் அடுத்த வாரம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற உள்ளது என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

Thalaivar 173: சுந்தர்.சிக்கு டபுள் சேலரி!.. ரஜினி படத்தின் மொத்த பட்ஜெட் இவ்வளவு கோடியா?..

விஜயின் பாடும் கடைசி பாடல்.. ‘ஜனநாயகனின்’ ஃபர்ஸ்ட் சிங்கிள் எப்படி வந்துருக்கு தெரியுமா?

SSMB29: ராஜமௌலி - மகேஷ்பாபு படத்தில் வில்லனாக பிருத்திவிராஜ்!.. போஸ்டரே டெரரா இருக்கே!..

சுந்தர்.சியின் திரையுலக பயணம்.. ரஜினி 173ல் எப்படி வொர்க் அவுட் ஆகப் போகிறது?

ஜர்னலிசத்தை சாக்கடைக்கு கொண்டு செல்கிறார்கள்! - கவுரி கிஷன் விவகாரத்தில் குஷ்பூ ஆவேசம்!

அடுத்த கட்டுரையில்
Show comments