Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தர்மதுரை - பெயருக்கேற்ற பெருந்தன்மை

தர்மதுரை - பெயருக்கேற்ற பெருந்தன்மை
, திங்கள், 30 நவம்பர் 2015 (15:01 IST)
பழைய படங்களின் பெயரை புதுப்படத்துக்கு வைப்பதென்றால், பழைய தயாரிப்பாளரின் அல்லது அவரது வாரிசுகளின் அனுமதி கடிதத்தை பெற வேண்டும்.


 
 
இந்த பழைய பெயர் மோகத்திலும் ரஜினிதான் நம்பர் ஒன். அவர் நடித்தப் படங்களின் பெயரை பயன்படுத்தவே அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர். சீனு ராமசாமி தனது அடுத்தப் படத்துக்கு தர்மதுரை என்று பெயர் வைத்துள்ளார்.
 
இந்தப் பெயரை பயன்படுத்த அனுமதி கேட்டு ஸ்டுடியோ 9 சுரேஷ், பழைய தர்மதுரை படத்தை தயாரித்த எஸ்.ராமனாதனின் தரப்பை அணுகியுள்ளனர்.

அவர்களை சந்தித்த பத்தே நிமிடத்தில் அனுமதி கடிதத்தை தந்து சுரேஷை ஆச்சரியத்தில் திக்குமுக்காட வைத்துள்ளனர். முக்கியமான விஷயம், இந்த தலைப்பு தானத்துக்காக பைசா வாங்கவில்லையாம் அவர்கள்.

பெயருக்கேற்ற பெருந்தன்மை.

Share this Story:

Follow Webdunia tamil