Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹாலிவுட் படத்தில் நடிக்கிறாரா நடிகை டாப்சி? பரபரப்பு தகவல்

Webdunia
திங்கள், 1 ஜூன் 2020 (19:36 IST)
தமிழில் தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கிய ’ஆடுகளம்’ என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான நடிகை டாப்ஸி, அதன்பின் அஜித் நடித்த ஆரம்பம் உள்பட பல திரைப்படங்களில் நடித்தார். தற்போது அவர் பாலிவுட்டில் பிரபல நடிகையாக இருக்கிறார் என்பதும் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் மட்டும் அவர் தேர்வு செய்து நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் ஹாலிவுட்டில் சூப்பர் ஹீரோயின் படம் ஒன்றை தயாரிக்க டிஸ்னி நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதற்காக இந்நிறுவனம் உலகின் முன்னணி நடிகர் நடிகைகளுக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும், அவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்ட நடிகைகளில் ஒருவர் டாப்ஸி என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்தியாவில் இருந்து அழைக்கப்பட்ட ஒரே நடிகை டாப்சி என்பதும் குறிப்பிடத்தக்கது
 
லாக்டவுன் முடிந்தவுடன் அமெரிக்காவில் உள்ள டிஸ்னி நிறுவனத்தின் ஆடிஷனுக்கு டாப்சி செல்ல உள்ளதாகவும் அவர் தேர்வு செய்ய அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஏனெனில் இந்த சூப்பர் ஹீரோயின் படத்தின் கதை இந்தியாவை பின்னணியை கொண்ட கதையம்சம் கொண்டதாக இருப்பதாகவும், எனவே இந்திய நடிகையான டாப்சிக்கு இந்த கேரக்டருக்கு பொருத்தமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது டாப்ஸி ஹாலிவுட் வாய்ப்பைப் பெறுவாரா? என்பதை பொருத்திருந்து பார்ப்போம்

தொடர்புடைய செய்திகள்

சமுத்திரக்கனியின் ராமம் ராகவம் படம் பெரும் வெற்றியடையும் - இயக்குனர் பாலா.

கவின்+யுவன்+இளன் கூட்டணியின் இளமை ததும்பும் 'ஸ்டார்' பட முன்னோட்டம்!

பிடிச்சு இழுக்கத்தான் செய்யும், உதைச்சு தள்ளிட்டு மேல வரணும்: கவின் நடித்த ’ஸ்டார்’ டிரைலர்..!

'ராபர்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை- நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார்!

வசூலிலும் வரவேற்பிலும் பட்டய கிளப்பும் "ரத்னம்" விஷாலின் ரசிகர்கள் உற்சாகம்.

அடுத்த கட்டுரையில்
Show comments