Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லப்பர் பந்து இயக்குனரின் அடுத்த படத்தில் நடிக்கப் போவது இந்த ஹீரோதானா?

vinoth
சனி, 2 நவம்பர் 2024 (13:48 IST)
பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில் சில வாரங்களுக்கு முன்னர் வெளியான ‘லப்பர் பந்து’ திரைப்படம் சூப்பர் ஹிட்டாகியுள்ளது. அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கியுள்ள இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்க முக்கிய வேடங்களில் பால சரவணன், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

ஷான் ரோல்டன் இந்த படத்திற்கு இசையமைத்து இருந்தார். இந்த படம் இதுவரை 40 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்துள்ளது. இந்த படம் வெளியாகி 50 நாட்கள் கடந்துள்ள நிலையில் சமீபத்தில் ஓடிடியில் ஸ்ட்ரீம் ஆனது. ஆனாலும் இன்னமும் சென்னை உள்ள நகரங்களில் மல்ட்டி ப்ளக்ஸில் சில திரைகளில் இந்த படம் ஓடிக்கொண்டிருக்கிறது.

இதனால் இந்த படத்தின் இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து கவனிக்கப்படும் இயக்குனர் ஆகியுள்ளார். அவரின் அடுத்த படத்தை தனுஷின் இட்லி கடை மற்றும் சுதா கொங்கரா சிவகார்த்திகேயன் இணையும் படம் ஆகியவற்றை தயாரிக்கும் Dawn Pictures நிறுவனம் தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் அந்த படத்தில் கதாநாயகனாக தனுஷ் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாகவும் சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தமிழ்ப் படத்துக்கு முதலில் நான்தான் இசையமைப்பாளர்… என்னை விரட்டிவிட்டார்கள்- சந்தோஷ் நாராயணன் ஜாலி பேச்சு!

கஞ்சா வியாபாரிகளோடு தொடர்பு? மன்சூர் அலிகான் மகன் கைது!

கலகலப்பு 3 படத்தில் நடிக்கப் போகும் நடிகர்கள் இவர்கள்தான்… வெளியான தகவல்!

சச்சினின் கைகளை விடாமல் பற்றிக்கொண்ட வினோத் காம்ப்ளே.. இணையத்தில் வைரல் ஆகும் புகைப்படம்!

புஷ்பா இரண்டாம் பாகத்தோடு முடியாது… கடைசி நேரத்தில் படக்குழு கொடுத்த சர்ப்ரைஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments