Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஷால் விவகாரத்தில் தலையிட்டு குட்டு வாங்கிய தமிழக அரசு

Webdunia
வெள்ளி, 21 டிசம்பர் 2018 (17:19 IST)
தயாரிப்பாளர் சங்க அலுவலகத்துக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.


 
 தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராகவும், நடிகர் சங்கத்தின் செயலாளராகவும் இருக்கும் விஷாலுக்கு , எதிராக பாரதிராஜா, ஏஎல் அழகப்பன், ஜேகே ரிதீஸ் உள்பட  தயாரிப்பாளர்கள் ஒரு பிரிவினர் போர்க்கொடி உயர்த்தி வருகிறார்கள்.
 
விஷால் கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றவில்லை, தன்னிச்சையாக செயல்படுகிறார், கியூப் பிரச்சனை, தமிழ் ராக்கர்ஸ் என பல காரணங்களை காட்டி அவர் மீது புகார்  தெரிவித்து சங்க கட்டிடத்துக்கு பூட்டினர். இதனால் பூட்டை உடைத்து தயாரிப்பாளர் சங்கத்துக்கு உள்ளே நுழைய முயன்ற விஷாலை தடுதக நிறுத்தி போலீசார் நேற்று கைது செய்து விடுவித்தனர். இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக விஷால் சார்பாக மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், தயாரிப்பாளர் சங்க அலுவலகத்துக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற  உத்தரவிட்டுள்ளது. தேர்தல் மூலம் தேர்வு செய்யப்பட்ட விஷால் உள்ளிட்ட சங்க நிர்வாகிகளை தடுத்து நிறுத்தியது ஏன் என்றும் போலீசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. 
 
இந்த விவகாரத்தில் தேவையில்லாமல் தலையிட்டு தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் குட்டு வாங்கி இருப்பதாக விஷால் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர். முன்னதாக சர்கார் விவகாரத்திலும் தமிழக அரசு குட்டு வாங்கியது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விக்ரமின் ‘வீர தீர சூரன்’ ரன்னிங் டைம் இவ்வளவு தானா? சென்சார் சர்டிபிகேட் தகவல்..!

வருண் தவானை மன்னித்த பூஜா ஹெக்டே.. நடுவானில் விமானத்தில் நடந்தது என்ன?

இன்னும் 75 நாட்களில் ரிலீஸ்.. ‘தக்லைஃப்’ சூப்பர் போஸ்டரை வெளியிட்ட கமல்ஹாசன்..!

வெண்ணிற உடையில் செல்லப் பிராணியுடன் கொஞ்சி குலாவும் யாஷிகா ஆனந்த்!

திவ்யா துரைசாமியின் அழகிய புகைப்படத் தொகுப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments