Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சென்னை பாக்ஸ் ஆபிஸ்

சென்னை பாக்ஸ் ஆபிஸ்
, புதன், 18 மே 2016 (17:45 IST)
5. மனிதன்
 
உதயநிதி நடித்துள்ள இந்த இந்தித் தழுவல் சென்றவார இறுதியில் 13.60 லட்சங்களை வசூலித்து ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது. இதுவரை இதன் சென்னை வசூல் 2.32 கோடிகள்.
 
4. பென்சில்
 
ஜீ.வி.பிரகாஷ் நடிகனாக அறிமுகமான முதல் படம் பென்சில் சென்ற வாரம்தான் வெளியானது. வெள்ளிக்கிழமை வெளியான படம் முதல் மூன்று தினங்களில் சென்னையில் 26.60 லட்சங்களை தனதாக்கியுள்ளது.
 
3. கோ 2
 
பாபி சிம்ஹா நடித்துள்ள கோ 2 படமும் சென்ற வாரமே வெளியானது. முதல் மூன்று தினங்களில் இப்படத்தின் சென்னை வசூல் 26.80 லட்சங்கள்.
 
2. கேப்டன் அமெரிக்கா - சிவில் வார் (ஆங்கிலம்)
 
இந்த ஆங்கிலப் படம் யுஎஸ்ஸில் சாதனை புரிவது போலவே இங்கும் வசூலை அள்ளுகிறது. சென்ற வார இறுதியில் இதன் சென்னை வசூல் 30.90 லட்சங்கள். இதுவரை சென்னையில் 1.18 கோடியை தனதாக்கியுள்ளது.
 
1. 24
 
சூர்யாவின் 24 இந்த வாரமும் முதலிடத்தில் உள்ளது. சென்ற வார இறுதியில் இப்படத்தின் வசூல், 1.15 கோடி. சென்ற ஞாயிறுவரை சென்னையில் மட்டும் 3.90 கோடிகளை வசப்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

2016 சட்டமன்ற தேர்தல் முடிவு - அந்தியூர் தொகுதி