Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நடனமாடி மகிழ்விக்க இருக்கும் நமிதா

நடனமாடி மகிழ்விக்க இருக்கும் நமிதா
, திங்கள், 7 ஜூலை 2014 (18:45 IST)
நமிதா நடித்து நான்கைந்து வருடங்கள் இருக்குமா? நடிக்கவில்லை என்றாலும் நமிதாவுக்கான ரசிகர்கள் அப்படியேதான் இருக்கிறார்கள். நமிதாவின் இடத்தை நிரப்பப் போவதாகச் சொன்ன நடிகைகள் நாலே மாதங்களில் காணாமல் போய்விடுவது ஆச்சரியம்.
நமிதா சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காகச் சென்றார். நமிதா மேடை ஏறப்போகிறார் என்றதுமே மேடை சரிந்தது. இன்னொரு இடத்தில் நமிதாவைப் பார்ப்பதற்காக பெரிய கலவரத்தையே ஏற்படுத்தினார்கள் ரசிகர்கள்.
 
உள்ளூரைப் போலத்தானே இருக்கும் வெளிநாடுகளும்.
 
இந்த மாதம் 13 மற்றும் 17 ஆம் தேதிகளில் அமெரிக்காவில் தமிழ் மெகா ஸ்டார் கொண்டாட்டம் என்ற பெயரில் கலைநிகழ்ச்சிகள் நடத்துகிறார்கள். திரைத்துறையிலிருந்து ஒதுங்கியிருக்கும் நெப்போலியன்தான் சிறப்பு அழைப்பாளர். கலை நிகழ்ச்சியை அரங்கேற்றயிருப்பவர்கள் ரோபோ சங்கர் போன்ற தொலைக்காட்சி பிரபலங்கள். அதில் நமிதாவும் நடனமாடுகிறார்.
 
கலந்து கொள்கிறவர்களின் பட்டிலைப் பார்த்தால் நமிதாவை நம்பி விழாவை நடத்துவதாகத் தெரிகிறது.

Share this Story:

Follow Webdunia tamil