Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராமதாஸ் பயோபிக் படத்தைக் கைவிட்ட லைகா… கையிலெடுத்த தமிழ்க் குமரன்!

vinoth
சனி, 3 ஆகஸ்ட் 2024 (14:30 IST)
தமிழ் சினிமாவில் பாரதி கண்ணம்மா, பொற்காலம் மற்றும் ஆட்டோகிராப் உள்ளிட்ட படங்கள் மூலமாக முத்திரைப் பதித்தவர் இயக்குனர் சேரன். ஆட்டொகிராப் திரைப்படத்தின் மூலமாக நடிகராகவும் அறிமுகமாகி, பல வெற்றிப் படங்களைக் கொடுத்தார். ஆனால் ஒரு கட்டத்தில் அவருக்கு படங்கள் இயக்க வாய்ப்புகள் அமையவில்லை.

இந்நிலையில் அவர் தமிழகத்தின் முக்கிய அரசியல் தலைவர்களில் ஒருவரான பாமக நிறுவனர் ராமதாஸின் வாழக்கை வரலாற்றுப் படத்தை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. அந்த படத்தில் ராமதாஸ் வேடத்தில் சரத்குமார் நடிப்பார் என்றும், லைகா நிறுவனம் தயாரிக்கும் என்றும் சொல்லப்பட்டது. ஆனால் அதன் பிறகு அடுத்தகட்டத்துக்கு எதுவும் நகரவில்லை. இதையடுத்து படத்தில் இருந்து சரத்குமார் வெளியேறிவிட்டதாக சொல்லப்பட்டது. அதன் பிறகு அந்த படம் எடுக்கும் முடிவை லைகா நிறுவனம் கைவிட்டுவிட்டதாக தகவல்கள் பரவின.

இந்நிலையில் இப்போது அந்த படத்தை லைகா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான தமிழ்க் குமரன் தன்னுடைய தயாரிப்பு நிறுவனம் மூலமாக தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. தமிழ்க் குமரன் பாமகவில் முக்கியப் பொறுப்பிலும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கருப்பு நிற கௌனில் கலக்கல் போஸ் கொடுத்த திவ்யபாரதி!

ஓணம் ஸ்பெஷல் போட்டோஷூட் ஆல்பத்தை வெளியிட்ட மாளவிகா மோகனன்!

தமிழில் ‘F1’ படத்துக்கு அவர்தான் பொருத்தமாக இருப்பார்… நரேன் கார்த்திகேயன் கருத்து!

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படத்தயாரிப்பாளர் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்த இளையராஜா!

லெஜண்ட் சரவணன் நடிக்கும் இரண்டாவது படத்தின் ஷூட்டிங் நிறைவு!

அடுத்த கட்டுரையில்
Show comments