கொரோனா பாதிப்பு காரணமாக நடிகர் மாறன் உயிரிழப்பு

Webdunia
புதன், 12 மே 2021 (08:51 IST)
கொரோனா பாதிப்பு காரணமாக நடிகர் மாறன் உயிரிழப்பு
தளபதி விஜய் நடித்த கில்லி உள்பட பல திரைப்படங்களில் துணை நடிகராக நடித்த நடிகர் மாறன் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த சில நாட்களாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் 
 
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளன. ஏற்கனவே பல திரையுலக பிரபலங்கள் அடுத்தடுத்து கொரோனாவுக்கு உயிரிழந்ததை அடுத்து இன்று மேலும் ஒருவர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
நடிகர் விஜய் நடித்த கில்லி, சுந்தர் சி நடித்த தலைநகரம் உள்பட பல திரைப்படங்களில் நடிகர் மாறன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது, நடிகர் மறைவு திரையுலகினர் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்
 
கடந்த சில நாட்களில் தமிழ் திரையுலகை சேர்ந்த விவேக், பாண்டு, நெல்லை சிவா ஆகியோர் காலமான நிலையில் இன்று மாறனும் உயிரிழந்துள்ளார்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

என்னை வெளிய போக சொல்ல நீங்க யாரு! திவ்யாவிடம் எகிறிய வாட்டர்மெலன்! Biggboss-ல் ட்விஸ்ட்!

ரித்திகா சிங்கின் வைரல் க்யூட் க்ளிக்ஸ்!

பிக்பாஸ் லாஸ்லியாவின் வைரல் க்யூட் போட்டோஸ்!

மாரி செல்வராஜின் மாயாஜால உலகில் தனுஷ்… ‘தனுஷ் 56’ பட அப்டேட்!

சேரனின் ‘ஆட்டோகிராஃப்’ படத்தின் ரி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments