Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெற்றிமாறனின் அடுத்த களம் கவுரவக்கொலை – ஆந்தாலஜிக்காக கைகோர்க்கும் முன்னணி இயக்குனர்கள்

Webdunia
புதன், 9 அக்டோபர் 2019 (08:18 IST)
நெட்பிளிக்ஸ் தயாரிக்கும் கௌரவக் கொலைப் பற்றிய ஆந்தாலஜி படம் ஒன்றுக்காக தமிழின் முன்னணி இயக்குனர்கள் நால்வர் இணைய இருக்கின்றனர்.

ஒரே மாதிரியான கதைக் கருவைக் கொண்ட  சில குறும்படங்களை இணைத்து ஒரு திரைப்படமாக எடுப்பது ஆந்தாலஜி எனப்படுகிறது. உலக அளவில் மிகவும் பிரசித்தி பெற்று வரும் இந்த வகையான ஜானர் படங்கள் இப்போது அதிகளவில் வெளிவர ஆரம்பித்துள்ளன. வைல்டு டேல்ஸ் எனும் அர்ஜெண்டினிய படம் இந்த ஜானரில் வெளிவந்து உலக அளவில் அங்கிகாரம் பெற்றதை அடுத்து இப்பொது உலகெங்கும் பல மொழிகளில் அதுபோல படங்கள் வெளியாக ஆரம்பித்துள்ளன.

அந்த வரிசையி தமிழில் நெட்பிளிக்ஸ் தயாரிக்கும் புதிய ஆந்தாலஜி படத்துக்காக வெற்றி மாறன், கெளதம் மேனன், விக்னேஷ் சிவன், சுதா கொங்காரா ஆகியோர் ஒப்பந்தம் ஆகியுள்ளனர். இதற்காக இவர்கள் நான்குபேரும் தனித்தனியாக குறும்படங்களை இயக்க உள்ளனர். அந்த 4 குறும்படங்களின் கதைக்கருவும் ஆணவக் கொலை சம்மந்தப்பட்டதாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் விக்னேஷ் சிவன் இயக்கும் குறும்படத்திற்கான படப்பிடிப்பு சென்ற வாரம் தொடங்கியுள்ளது. அதில் அஞ்சலி மற்றும் இந்தி நடிகை கல்கி கோச்சலின் ஆகியோர் நடிக்கின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

அடுத்த கட்டுரையில்
Show comments