Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுக ஆட்சி என்றாலே கப்சிப் ஆகும் நடிகர்கள்.. குரல் கொடுக்க பயமா?

Siva
வியாழன், 20 ஜூன் 2024 (13:40 IST)
அதிமுக ஆட்சியில் தவறு நடக்கும் போது ஆவேசமாக குரல் கொடுக்கும் நடிகர்கள் திமுக ஆட்சியில் கப்சிப் என மௌனமாக இருப்பது ஏன் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
 
அதிமுக ஆட்சியில் சாத்தான்குளத்தில் தந்தை மகன் உயிரிழந்த போது பெரிய நடிகர்கள் முதல் சின்ன நடிகர்கள் வரை குரல் கொடுத்தார்கள். குறிப்பாக சூர்யா, சித்தார்த், பிரகாஷ் ராஜ், பா. ரஞ்சித், வெற்றிமாறன் உள்பட பலர் அதிமுக அரசுக்கு எதிராக பல நேரங்களில் குரல் கொடுத்துள்ளார்கள்.
 
ஆனால் தற்போது கள்ளச்சாராயம் மரணம் முப்பதை தாண்டி உள்ள நிலையில் சூர்யா உட்பட பிரபல நடிகர்கள் கப்சிப் என மெளனமாக இருப்பது ஏன் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்
 
இதுவரை விஜய் மற்றும் பா ரஞ்சித் ஆகிய இருவரும் மட்டுமே குரல் கொடுத்துள்ளனர் என்பதும் சூர்யா உட்பட பலரும் அமைதியாக இருப்பது ஏன் என்றும் நெடிசன்கள் கேள்வி எழுப்பி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
அதேபோல் திமுக கூட்டணி கட்சியில் உள்ள கட்சித் தலைவர்கள் ஒருவர் கூட வாயை திறக்காமல் மௌனமாக இருப்பதும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளதாக நெட்டிசன் கூறியுள்ளனர்.
 
Edited by Siva
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’கல்கி 2898 ஏடி’ படத்தின் 4 நாள் வசூல்.. தயாரிப்பு நிறுவனத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு..!

அழகூரில் பூத்தவளே… நஸ்ரியாவின் க்யூட்டெஸ்ட் போட்டோ கலெக்‌ஷன்!

ஆரோக்யமற்ற உணவுப்பொருளை விளம்பரப்படுத்தியது தவறுதான்… சமந்தா பேச்சு!

சுந்தர் சியோடு மோதும் அனுராக் காஷ்யப்… எப்படி இருக்கு ‘ஒன் டு ஒன்’ டிரைலர்!

விஷால், ஜெயம் ரவி விலகல்… விஜய் சேதுபதி பாண்டிராஜ் காம்பினேஷன் உருவான பின்னணி என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments