Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹாலிடே வெற்றிபெற கட்டித் தழுவி வாழ்த்திய விஜய்

Webdunia
செவ்வாய், 3 ஜூன் 2014 (10:16 IST)
துப்பாக்கி படத்தின் இந்தி ரீமேக் ஹாலிடே வரும் 6-ம் தேதி வெளியாகிறது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியிருக்கும் இப்படம் வெற்றியடைய தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார் விஜய்.
சுமாரான வெற்றியை மட்டுமே தந்து கொண்டிருந்த விஜய்க்கு சூப்பர்ஹிட்டாக அமைந்த படம் துப்பாக்கி. முருகதாஸின் கதை, திரைக்கதை, வசனத்தில் உருவான இப்படத்தை தாணு தயாரித்திருந்தார். காஜல் அகர்வாலும், சத்யனும் முக்கிய வேடமேற்றிருந்தனர். தமிழில் வசூல் சாதனைப் படைத்த இந்தப் படத்தை இந்தியில் ஹாலிடே என்ற பெயரில் அக்ஷய் குமாரை வைத்து இயக்கியுள்ளார் முருகதாஸ்.
 
தற்போது விஜய்யை வைத்து கத்தி படத்தை இயக்கி வரும் அவர், ஹாலிடே வெளியாவதையடுத்து அதன் பிரமோஷனுக்காக மும்பை சென்றுள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள முருகதாஸ், 
 
ஜுன் 6-ம் தேதி ஹாலிடே வெளியாகிறது. இதற்காக மும்பைக்கு போய் கொண்டிருக்கிறேன். ஹாலிடே படம் வெற்றியடைய விஜய் என்னை கட்டித் தழுவி வாழ்த்து தெரிவித்தார் என குறிப்பிட்டுள்ளார்.
 
ஹாலிடேயில் காஜல் அகர்வாலின் கதாபாத்திரத்தில் சோனாக்ஷி சின்கா நடித்துள்ளார்.

கோட் படத்தின் சேட்டிலைட் பிஸ்னஸில் சொதப்பிய தயாரிப்பு நிறுவனம்… 30 கோடி நஷ்டம்?

தென்காசியில் தொடங்கிய விடுதலை 2 ஷூட்டிங்!

படை தலைவன் படத்துக்குப் பிறகு பிரபல இயக்குனர் படத்தில் சண்முக பாண்டியன்!

அஜித் சிறுத்தை சிவா படத்தில் இருந்து வெளியேறுகிறதா சன் பிக்சர்ஸ்?

கைவிட்ட சூர்யா... விக்ரம் பக்கம் செல்லும் சுதா கொங்கரா!

Show comments