Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பத்திரிக்கையாளர்களை தாக்கினார்களா தமன்னாவின் பாதுகாவலர்கள்?

Webdunia
ஞாயிறு, 18 செப்டம்பர் 2022 (09:29 IST)
நடிகர் தமன்னா நடிக்கும் பப்ளி பவுன்சர் என்ற திரைப்படம் நேரடியாக டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளது.

சமீபகாலமாக தமிழில் பெரிதாக வாய்ப்புகள் இல்லாமல் இருந்த தமன்னாவுக்கு  ‘நவம்பர் ஸ்டோரிஸ்’ வெப் சீரிஸ் மறுவாழ்வு கொடுத்தது. இதையடுத்து அவருக்கு மீண்டும் வாய்ப்புகள் வர ஆரம்பித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இப்போது தெலுங்கில் மாஸ்டர் செப் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் மேலும் ரசிகர்களைக் கவரும் விதமாகவும், பட வாய்ப்புகள் பெறும் விதமாகவும் சமூக வலைதளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார்.

இந்நிலையில் வரும் 23 ஆம் தேதி இந்த படம் ரிலீஸாகும் நிலையில் படத்தின் ப்ரமோஷனுக்காக தமன்னா ஐதராபாத் வந்தார். அப்போது அவரைப் புகைப்படம் எடுக்க பத்திரிக்கையாளர்கள் கேட்க அதற்கு தமன்னாவின் பாதுகாவலர்கள் மறுத்துள்ளனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட ஒரு கட்டத்தில் பவுன்ஸர்கள் பத்திரிக்கையாளர்களை தாக்கியதாகவும் சொல்லப்படுகிறது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வெற்றிமாறன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஐஜியிடம் புகார் அளித்த வழக்கறிஞர்..!

கிளாமர் க்யூன் யாஷிகாவின் லேட்டஸ்ட் அசத்தல் புகைப்படத் தொகுப்பு!

ஸ்டைலிஷ் லுக்கில் ஹூமா குரேஷியின் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

அந்த இரண்டு படங்களுக்கு விருதுகள் இல்லாதது ஏமாற்றமே- வைரமுத்துவின் வாழ்த்துகளும் ஆதங்கமும்!

‘ஆடுஜீவிதம்’ படத்திற்கு ஏன் தேசிய விருது கிடைக்கவில்லை? ரசிகர்கள் அதிருப்தி

அடுத்த கட்டுரையில்
Show comments