Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆக்சிஜன் குறைந்த இடத்தில் ஆடிவிட்டு வந்த தமன்னா

ஆக்சிஜன் குறைந்த இடத்தில் ஆடிவிட்டு வந்த தமன்னா
, செவ்வாய், 3 ஜூன் 2014 (11:24 IST)
தமன்னா தனது திரைப்பட வாழ்க்கையில் இதுவரை அறிந்திராத புதுவித அனுபவத்தை சமீபத்தில் அனுபவப்பட்டுள்ளார். ஆக்சிஜன் குறைவாக இருக்கும் மலைப் பகுதியில் மகேஷ் பாபுவுடன் டூயட் ஆடியிருக்கிறார்.
இமயமலையில் அமைந்திருக்கும் லே லடாக் சுற்றுலாவுக்கு மிகவும் புகழ் பெற்ற ஊர். காஷ்மீரின் முன்னாள் தலைநகர். கடல் மட்டத்திலிருந்து பல்லாயிரக்கணக்கான அடிகள் உயரத்தில் இருக்கும் லே லடாக்கில் நடப்பதே சிரமமானது. இங்கு ஒரு பாடல் காட்சிக்கு ஆடியிருக்கிறார் தமன்னா. படம் ஆகடு.
 
தெலுங்கில் ஸ்ரீனி வைட்லா இயக்கத்தில் மகேஷ் பாபுவும், தமன்னாவும் ஆகடு என்ற படத்தில் நடித்து வருகின்றனர். அதன் ஒரு பாடல் காட்சியை லே யில் எடுத்தால் சிறப்பாக இருக்கும் என யூனிட்டுடன் கிளம்பியிருக்கிறார்கள். அவர்கள் எதிர்பார்த்தது போன்றே மிக அழகான லொகேஷன். ஆனால் நடனமாடுவதுதான் எதிர்பார்த்ததைவிட கடினமாக இருந்துள்ளது.
 
ஆக்சிஜன் குறைவாக இருக்கும் லே யில் மிகச்சிரமப்பட்டே இருவரும் ஆடியிருக்கிறார்கள். ஆனால் அது நான் இதுவரை அனுபவப்படாத புதுவித அனுபவமாக இருந்தது என தனது லே அனுபவம் குறித்து குறிப்பிடுகிறார் தமன்னா.
 
தெலுங்கில் இப்படியொரு ஜில் அனுபவம் என்றால் இந்தியில் நேர்மாறாக ஹாட் கான்ட்ரவர்சி. ஹம்சகல்ஸ் படத்தின் இயக்குனர் சஜித் கானும் தமன்னாவும் காதலிக்கிறார்கள் என்று சில ஊடகங்கள் கிசுகிசு எழுதின. அதனை திட்டவட்டமாக மறுத்துள்ளார் தமன்னா. சஜித் கான் மட்டுமில்லை, யாரையும் காதலிக்கவில்லை என கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil