Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ட்விட்டரில் பேசிக்கொண்ட தனுஷ் - அனிருத்

Webdunia
வெள்ளி, 17 நவம்பர் 2017 (10:21 IST)
நேரில் பேசிக்கொள்ளாத தனுஷும், அனிருத்தும் ட்விட்டரில் பேசிக்கொண்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

 
தனுஷ், அனிருத் இருவருக்கும் மிகப்பெரிய பேரை பெற்றுத்தந்த ‘ஒய் திஸ் கொலவெறி’ பாடல் வெளியாகி, நேற்றுடன் ஆறு ஆண்டுகள் ஆகிறது. ‘3’ படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடல், கடல் கடந்தும் பேமஸானது. இந்தப் படத்தின் மூலம்தான்  இசையமைப்பாளராக அறிமுகமானார் அனிருத்.
 
6 ஆண்டுகள் ஆனதையொட்டி, ட்விட்டரில் அனிருத்துக்கு வாழ்த்து சொல்லிருக்கிறார் தனுஷ். “வாழ்த்துகள் அனிருத். இன்னும் இதுபோல் நிறைய வரவேண்டும். இந்தப் பாடலுக்கு மீண்டும் ஒருமுறை நன்றி” என தனுஷ் ட்வீட் செய்ய, பதிலுக்கு நன்றி  தெரிவித்துள்ளார் அனிருத்.
 
“மிகச்சிறந்த பயணம் ப்ரோ. என்னைவிட, என்மீது அதிக நம்பிக்கை வைத்ததற்கு நன்றி” எனத் தெரிவித்துள்ளார் அனிருத். சில வருடங்களாக தனுஷும், அனிருத்தும் பேசிக் கொள்வதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இசைக் கச்சேரியில் செம்ம vibe-ல் ஆண்ட்ரியா… கூல் க்ளிக்ஸ்!

மாளவிகா மோகனின் லேட்டஸ்ட் க்யூட் புகைப்பட தொகுப்பு!

கார்த்தி 29 படத்தில் முக்கிய வேடத்தில் வடிவேலு?... பேச்சுவார்த்தை நடத்தும் இயக்குனர்!

ராஜமௌலி மகேஷ்பாபு படத்தின் பணிகள் தொடங்கியது!

ரெட்ட தல படத்தின் முக்கிய அப்டேட் கொடுத்த அருண் விஜய்!

அடுத்த கட்டுரையில்
Show comments