Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

டாணா காக்கி சட்டையானது - அனுமதி அளித்த கமலுக்கு சிவ கார்த்திகேயன் நன்றி

டாணா காக்கி சட்டையானது - அனுமதி அளித்த கமலுக்கு சிவ கார்த்திகேயன் நன்றி
, சனி, 1 நவம்பர் 2014 (15:44 IST)
தனுஷ் தயாரிப்பில் சிவ கார்த்திகேயன், ஸ்ரீதிவ்யா, பிரபு நடித்த டாணா படத்தின் பெயர் காக்கி சட்டை என அதிகாரப்பூர்வமாக மாற்றப்பட்டுள்ளது. இந்தப் பெயருக்கு அனுமதியளித்த கமலுக்கும், சத்யா மூவிஸுக்கும் சிவ கார்த்திகேயன் நன்றி தெரிவித்துள்ளார்.
 
தனுஷின் வுண்டர்ஃபார் தயாரிப்பில் எதிர்நீச்சல் டீம் உருவாக்கிய படம்தான் காக்கி சட்டை. ஹீரோயின் மட்டும் ப்ரியா ஆனந்துக்குப் பதில் ஸ்ரீதிவ்யா. எதிர்நீச்சலை இயக்கிய துரை செந்தில்குமார் படத்தை இயக்கியிருந்தார். 
 
இந்தப் படத்துக்கு டாணா என்று முதலில் பெயரிட்டிருந்தனர். டாணா என்றால் காவல்காரன் என்று அர்த்தம். இதில் சிவ கார்த்திகேயன் போலீசாக வருவதால் இந்தப் பெயர்.
 
டாணா என்பதன் பொருள் பலருக்கும் தெரியாது என்பதால் படத்தின் பெயரை காக்கி சட்டை என்று மாற்றுவது என முடிவு செய்தனர். சத்யா மூவிஸின் தயாரிப்பில் கமல் நடிப்பில் ஏற்கனவே காக்கி சட்டை பெயரில் படம் வெளியாகியிருப்பதால் முறைப்படி அவர்களிடம் அனுமதி கடிதம் வாங்க வேண்டும். கமலும், சத்யா மூவிஸும் காக்கி சட்டை பெயரை பயன்படுத்த ஆட்சேபம் தெரிவிக்கவில்லை. அதனைத் தொடர்ந்து டாணா காக்கி சட்டை என அதிகாரப்பூர்வமாக மாற்றப்பட்டுள்ளது.
 
இது குறித்து பேசிய சிவ கார்த்திகேயன், எனது அடுத்தப் படத்தின் பெயர் காக்கி சட்டை. தலைப்பிற்கு அனுமதி அளித்த கமல் சாருக்கும், சத்யா மூவிஸுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

Share this Story:

Follow Webdunia tamil