தனுஷ் படத்திற்கு தடை கோரி மனுதாக்கல்...படக்குழு அதிர்ச்சி...

Webdunia
வியாழன், 18 மார்ச் 2021 (16:55 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் தனுஷ். இவரது நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் படம் கர்ணன். இப்படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் முடிந்த நிலையில், இப்படத்தில் சந்தோஷ் நாராயணன் இசையில் வெளியான முதல் பாடல் கண்டா வரச்சொல்லுங்க மற்றும் பண்டாரத்திபுராணம் ஆகிய பாடல்கள்வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றன.

இந்நிலையில் இப்படம் வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இப்படத்திற்கு தடைகோரி மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில், கர்ணன் படத்தில் மூன்று பாடல்கள் வெளியாகியுள்ள நிலையில் இதில் கண்டா வரச்சொல்லுங்க என்ற பாடல்நாட்டுப்புறப்பாடலை தழுவி எடுக்கப்பட்டுள்ளதாகவும், பண்டாரத்தி புராணம் என்ற பாடல் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை இழிவுபடுத்தும் விதத்தும் உள்ளதாகவும் கூறி இந்த வார்த்தைகள் இடம்பெறக்கூடாது அதை நீக்கும்வரை கர்ணன் படத்தை அனுமதிக்கக்கூடாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், தயாரிபாளர் தாணு, திங்க் மியுசிக், மாரில்செல்வராஜ், யூடியூப் சேனல் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. இவ்வழக்கு விசாரணை வரும் ஏப்ரல் 16 ஆம் தேதிக்கு ஒத்துவைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

23 ஆண்டுகளுக்குப் பிறகு களம் கண்ட அஜித்குமார்: மலேசிய ரேஸிங் அனுபவம் குறித்து நெகிழ்ச்சி

சரத்குமார்தான் சிறந்த நடிகர்! இவர எந்த லிஸ்ட்ல சேர்க்குறது? ராஜகுமாரனின் அடுத்த எபிசோடு

உலகப் புகழ்பெற்ற வார்னர் பிரதர்ஸ்-ஐ விலைக்கு வாங்கிய நெட்ஃபிளிக்ஸ்.. எத்தனை லட்சம் கோடி?

சூர்யாவின் ‘கருப்பு’ படத்தின் ஒரே தடையும் நீங்கியது.. இந்த தேதியில் ரிலீசா?

திடீரென அமெரிக்கா சென்ற சிவகார்த்திகேயன்.. அட்லி படம் போல் பிரமாண்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments