Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மார்ச் 27 ஆம் தேதிக்குப் பிறகு புதுப்படங்கள் இல்லை – டி ராஜேந்தர் அதிரடி முடிவு !

Webdunia
புதன், 11 மார்ச் 2020 (07:41 IST)
தமிழ் விநியோகஸ்தர்கள் சங்கம் அறிவித்துள்ள முடிவின் படி மார்ச் 27 ஆம் தேதிக்குப் பின் புதிய திரைப்படங்கள் வாங்கி வெளியிடப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் திரைப்பட விநியோஸ்தர்கள் சங்கக் கூட்டமைப்பின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட டி ராஜேந்தர் விநியோகஸ்தர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் பொருட்டு மார்ச் 27 ஆம் தேதிக்குப் பின்னர் புதிய படங்களை வாங்கி ரிலீஸ் செய்வதில்லை என ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது என அறிவித்துள்ளனர்.

விநியோகஸ்தர்களின் சங்கத்தின் இரண்டு தீர்மானங்கள் :-
1.விநியோகஸ்தர்கள் படங்களை விநியோகித்து அதன் மூலம் வரும் வருவாய்க்கு விதிக்கப்படும் 10% TDS வரியை முற்றிலுமாக ரத்து செய்யவேண்டும், இதற்கு மத்திய அரசு ஒத்துழைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கோரிக்கையை அரசு ஏற்கும் விதமாக மார்ச் மாதம் 27-ம் தேதி முதல் எந்த விநியோகஸ்தரும் படங்களை விநியோகிப்பதில்லை என்று ஒரு மனதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு விநியோகஸ்தர்களுக்கு TDS வரியை நீக்கும் வரை நடைமுறையில் இருக்கும்.

2. தற்போது திரையரங்க நுழைவுக் கட்டணங்களுக்கான GST (12%) வரியுடன் கூடுதலாக உள்ளாட்சி அமைப்புகளுக்கு LBT (8%)(இந்தவரி தமிழ்நாட்டில் மட்டுமே உள்ளது) கேளிக்கை வரி செலுத்துவதால் இது பார்வையாளர்களுக்கும் கூடுதல் சுமையாக அமைகிறது. ஆகையால் மேற்படி வரியினை (8%) முற்றிலும் ரத்து செய்ய தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

குக் வித் கோமாளி சீசன் 5.. முதல் எலிமினேஷன் இவரா? ஷாலின் ஜோயா எப்படி தப்பித்தார்?

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

அடுத்த கட்டுரையில்
Show comments