Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

குத்துப்பாடலில் கலக்க வரும் டி.ஆர், விஜய் சேதுபதி!!

குத்துப்பாடலில் கலக்க வரும் டி.ஆர், விஜய் சேதுபதி!!

குத்துப்பாடலில் கலக்க வரும் டி.ஆர், விஜய் சேதுபதி!!
, சனி, 15 அக்டோபர் 2016 (12:18 IST)
கே.வி ஆனந்த் இயக்கி வரும் பெயரிடப்படாத புதிய படம் ஒன்றில் விஜய் சேதுபதி மற்றும் விஜய டி.ராஜேந்தர் ஆகியோர் இணைந்து ஒரு பாடலுக்கு நடனமாட இருக்கின்றனர்.


 
 
இப்படத்தில் விஜய் சேதுபதி கதாநாயகனாகவும், விஜய டி.ராஜேந்தர் முக்கிய கதாபாத்திரம் ஒன்றிலும் நடிக்கின்றனர். மாற்றான் திரைப்படத்தை தொடர்ந்து கே.வி.ஆனந்த் இயக்கி வரும் இந்த திரைப்படத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை. 
 
இந்த படத்தில் டி.ராஜேந்தர் ஒரு பாடலை பாடியுள்ளார். இப்படத்தில் இடம்பெறும் குத்துப்பாடலுக்கு இருவரும் இணைந்து நடனமாட இருக்கிறார்களாம். ஆகையால் இந்த பாடல் ரசிகர்களுடையே நல்ல வரவேற்பை பெறும் என படக்குழுவினர் எதிர்பார்க்கின்றனர்.
 
இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக பிரேமம் புகழ் மடோனா செபாஸ்டியன் நடிக்கிறார். ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சுருதிஹாசனுக்கு விமர்சனங்களைப் பற்றி கவலை இல்லையாம்!!