Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திரை இசை சக்கரவர்த்தி டி ஆர் மகாலிங்கம் நூற்றாண்டு விழா-பி.சுசிலா நாசர் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பங்கேற்பு!

t r mahalingam
J.Durai
திங்கள், 17 ஜூன் 2024 (17:31 IST)
சோழவந்தான் அருகே தென்கரை கிராமத்தைச் சேர்ந்த இயல் இசை நாடக சக்கரவர்த்தி திரைப்பட நடிகர் பாடகர் கலைமாமணி டி ஆர் மகாலிங்கம் நூற்றாண்டு விழா தென்கரையில் உள்ள டிஆர்எம் சுகுமார் பவனத்தில் நடைபெற்றது.
 
இவ் விழாவை முன்னிட்டு இரண்டு நாட்களாக விழாக்கோலம் பூண்டு இருந்தது
 
பிரபல பின்னணி பாடகி பத்மபூஷன் மெல்லிசை அரசி இசைக் குயில் கலைமாமணி பி. சுசிலா குத்துவிளக்கு ஏற்றி வைத்து விழாவினை தொடங்கி வைத்தார்.
 
இதைத் தொடர்ந்து நாதஸ்வர தவில் வித்வான் வளையப்பட்டி சுப்பிரமணியன் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது டி ஆர் மகாலிங்கம் மற்றும் கோமதி மகாலிங்கம் தொண்டு அறக்கட்டளை மூலம் நிறுவப்பட்ட இயல் இசை நாடக சக்கரவர்த்தி திரைப்பட நடிகர் பாடகர் கலைமாமணி டி ஆர் மகாலிங்கம் மார்பளவு சிலைதிறப்பு விழா நடைபெற்றது.
 
இவ்விழாவிற்கு உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் டி கே கோபாலன்  தலைமை தாங்கினார் நடிகர் சங்க தலைவர் நாசர்திரைப்பட பாடகர் பத்மஸ்ரீ டாக்டர் சீர்காழி சிவசிதம்பரம் தென்னிந்திய நடிகர் சங்கம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய துணை தலைவர் பூச்சி எஸ் முருகன் தமிழக அரசு எம் ஜி ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனம் தலைவர் திரைப்பட நடிகர் ராஜேஷ் நகைச்சுவை நடிகர் செந்தில் நடிகர் இயக்குனர் சந்தான பாரதி நடிகர் அண்ணாதுரை கண்ணதாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் டி ஆர் மகாலிங்கம் பேரன் டி ஆர் எம் எஸ் ராஜேஷ் மகாலிங்கம் டி ஆர் வித்யா ஆகியோர் வரவேற்றனர்.
 
பூச்சி முருகன் டி ஆர் மகாலிங்கத்தின் மார்பளவு சிலையை திறந்து வைத்தார் அனைவருக்கும் மதியம் அறுசுவை உணவு வழங்கப்பட்டது மாலை தென்கரையில் அமைந்துள்ள இயல் இசை நாடக சக்கரவர்த்தி திரைப்பட நடிகர் பாடகர் கலைமாமணி டி ஆர் மகாலிங்கம் நினைவு கலையரங்கில் பிரபல பின்னணி பாடகர் பங்குபெறும் டி ஆர் எம் எஸ் சென்னை கிளாசிக் ஆர்கெஸ்ட்ராவின் இன்னிசைக் கச்சேரி மற்றும் நினைவு பரிசு வழங்குதல் நடைபெற்றது.
 
இதைத் தொடர்ந்து கலைமாமணி நாட்டிய திலகம் வெண்ணிறைஆடை நிர்மலா செந்தமிழ் தேன் மொழியாள் என்ற பாடலுக்கு நடனமாடி னார்இந்த நிகழ்ச்சியில் திருப்பரங்குன்றம் எம் எல் ஏ ராஜன் செல்லப்பாமுன்னாள் எம்எல்ஏ எம்வி கருப்பையாஊராட்சி மன்ற தலைவர் மஞ்சுளா ஐயப்பன் கூட்டுறவு சங்க  இயக்குனர் பங்களா மூர்த்தி வாடிப்பட்டி பேரூராட்சி துணைத் தலைவர் வழக்கறிஞர் கார்த்திக்முன்னாள் பேரூராட்சி தலைவர் எம் கே முருகேசன் தொழிலாளர் முன்னேற்ற சங்க தலைவர் பாலசுப்பிரமணியன் தென்கரை திமுக கிளைச் செயலாளர் சோழன் ராஜா விவசாயி கருப்பசாமி தென்கரை நாகமணி மற்றும் திரைப்பட நடிகர் நடிகைகள் இசை கலைஞர்கள் அரசியல் பிரமுகர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள் திரளாக கலந்து கொண்டனர் டி ஆர் மகாலிங்கத்தின் பேரன் ராஜேஷ் மற்றும் குடும்பத்தினருக்கு அப்துல் கலாம் அறக்கட்டளை சார்பில் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

குட் பேட் அக்லி… தமிழ்நாட்டில் வசூல் வேட்டை… மூன்று நாள் கலெக்‌ஷன் எவ்வளவு தெரியுமா?

பிரபல இயக்குனரின் படத்தில் விஜய் சேதுபதி மற்றும் சசிகுமார்!

விஜய்யை நடிக்க வைக்க எந்த இயக்குனரும் முன்வரவில்லை… SAC பகிர்ந்த பிளாஷ்பேக்!

என் முதல்படம் வந்தபோது நிறைய பெண் ரசிகைகள் இருந்தார்கள்… நடிகர் ஷாம் பகிர்வு!

மங்காத்தா படத்தோட கதை என்னுடையது… இயக்குனர் கங்கை அமரன் பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments