Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சந்திரமுகி-2 பட முதல் சிங்கில் #SWAGATHAANJALI ரிலீஸ்

Webdunia
வெள்ளி, 11 ஆகஸ்ட் 2023 (17:13 IST)
ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி வரும்  சந்திரமுகி 2 படத்தின் முதல் சிங்கில் இன்று வெளியாகியுள்ளது. 

ராகவா லாரன்ஸ், வடிவேலு, ராதிகா சரத்குமார் மற்றும் கங்கனா ரனாவத் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கும் சந்திரமுகி 2 படம் உருவாகியுள்ளது.

சந்திரமுகி 1 பாகத்திற்கு வித்யாசாகர் இசையமைத்த நிலையில்,  2 ஆம் பாகத்திற்கு ஆஸ்கர் விருது பெற்ற மரகதமணி இசையமைக்கிறார். முதல் பாகத்தை இயக்கிய பி வாசுவே இரண்டாம் பாகத்தையும் இயக்குகிறார்.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 15 ஆம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் படத்தின் இசை வெளியீடு விரைவில் நடக்கும் என தெரிகிறது. இந்நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு உரிமையை சோனி ம்யூசிக் நிறுவனம் கைப்பற்றியது.

இதனைத்தொடர்ந்து,  இதன் முதல் சிங்கில்  ‘ஸ்வாகதாஞ்சலி’ என்ற பாடல் விரைவில் வெளியாகும் என்று கூறி இதன் புரோமோ வீடியோவை  படக்குழு சமீபத்தில்  வெளியிட்டது.

இந்த நிலையில் சந்திரமுகி 2 படத்தின் முதல் சிங்கில் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

அதன்படி, லைகா  நிறுவனம் தன் டுவிட்டர் பக்கத்தில் இப்பாடலை வெளியிட்டடுள்ளது. சோனி சவுத் மியூசிக் என்ற யுடியூப் பக்கத்தில் வெளியாகியுள்ள இப்பாடல் ரசிகர்களின் வரவேற்பை பெற்று வைரலாகி வருகிறது.  இப்பாடலை சைதன்ய பிரசாத் எழுதியுள்ளார். ஸ்ரீநிதி திரிமுலா  பாடியுள்ளார். தேசிய விருது பெற்ற தோட்டா தரணி கலை வடிவமைப்பு செய்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிக்பாஸ் லாஸ்லியாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்டைலிஷ் உடையில் சம்யுக்தாவின் லேட்டஸ்ட் போட்டொஷூட் ஆல்பம்!

ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய விஜய்சேதுபதி… கவனம் ஈர்த்த பிக்பாஸ் ப்ரோமோ!

லவ் மேரேஜா? அரஞ்சுட் மேரேஜா?... நோ மேரேஜ் – கவனம் ஈர்க்கும் ஒன்ஸ்மோர் டீசர்!

மேம்பட்ட மனிதராக பயணம்தான் சிறந்த வழி: நடிகர் அஜித் வீடியோ வெளியீடு

அடுத்த கட்டுரையில்
Show comments