Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

குழந்தைகளை குறிவைக்கும் ஹைக்கூ

குழந்தைகளை குறிவைக்கும் ஹைக்கூ
, வெள்ளி, 29 மே 2015 (12:37 IST)
சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மெண்ட் தயாரிப்பில் வெளியான 36 வயதினிலே பெரும் வெற்றியை பெற்றுள்ள நிலையில், 2டி -இன் இரண்டாவது தயாரிப்பான ஹைக்கூ படத்தின் டீஸரை நேற்று மாலை வெளியிட்டனர்.
பாண்டிராஜ் இயக்கியிருக்கும் இந்தப் படம் குழந்தைகளை மையப்படுத்தியது. முக்கியமான வேடத்தில் பிந்து மாதவி நடித்துள்ளார். சூர்யா, அமலா பால் படத்தில் இருந்தாலும், அவர்களுக்கு சிறப்புத் தோற்றம்தான்.
 
டீஸரில் சூர்யா குழந்தைகளுடன் டைனோசர் போன்று நடக்கும் காட்சி இடம்பெற்றுள்ளது. பசங்க படத்தைப் போல் குழந்தைகளுடன் பெரியவர்களையும் ஹைக்கூ கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil