Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லாஸ்லியாவுக்கு உதவிய சூர்யா !

Webdunia
திங்கள், 2 ஆகஸ்ட் 2021 (18:19 IST)
மலையாளத்தில் வெளியாகி வெற்றிபெற்ற ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் என்ற படம் தமிழில் ரீமேக் ஆகியுள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை நடிகரி சூர்யா வெளியிடவுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

மலையாள சினிமாவில் கதையம்சம் உள்ள பெரிய ஸ்டார் நடிகர்கள் இல்லாத படங்கள் அதிகமாக வந்து கொண்டிருக்கின்றன. அந்த படங்களை மற்ற மொழிகளில் ரீமேக் செய்ய பலரும் ஆர்வமாக உள்ளனர். இந்த வகையில் சூரஜ் வெஞ்சரமூடு, சௌபின் ஷாகீர்,  ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் ஆண்ட்ராய்டு குஞ்சப்பன். திரையரங்குகளில் வெளியாகி வெற்றி பெற்ற இந்த படம் ஓடிடி பிளாட்பார்ம்களின் மூலம் மற்ற மொழி ரசிகர்களையும் சென்றடைந்தன.

அந்த வகையில் இப்போது தமிழில் இந்த படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை இயக்குநர் கே எஸ் ரவிக்குமார் வாங்கியுள்ளார். இந்த படத்தில் அவரே ஒரு முக்கியமானக் கதாபாத்திரத்தில் நடிக்க அவரின் உதவியாளர்கள் சபரி சரவணன் ஆகியோர் இயக்கி உள்ளனர். லாஸ்லியா நடித்துள்ள இப்படத்துக்கு கூகுள் குட்டப்பா என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது.
 

இந்த படத்தை கே எஸ் ரவிக்குமாரே தயாரித்துள்ள நிலையில் நாளை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில், சூர்யா இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை ரிலீஸ் செய்யவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் சூர்யா ஆதவன் என்ற படத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில், ஹாரர் திரில்லர் "டிமான்ட்டி காலனி 2" திரைப்படம், ZEE5 இல் ஸ்ட்ரீமிங் ஆக உள்ளது!

சென்னையில் செம்பொழில் கிராமத்துத் திருவிழாவில் கலந்துகொண்ட, நடிகர் கார்த்தி!!

ரஷ்ய சினிமாவின் பாரம்பரியம் மிக்க MOSFILM ஸ்டுடியோவின் 100-வது ஆண்டு விழாவை வெற்றிகரமாக கொண்டாடியது!.

சசிகுமார் - சிம்ரன் முதன்முறையாக இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு அக்டோபரில் தொடக்கம்!

மாடர்ன் ட்ர்ஸ்ஸில் துஷாராவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments