Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூர்யா நடிப்பில் ரவிகுமார் இயக்க இருந்த படமும் ட்ராப்பா?... பொருளாதார சிக்கலில் ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம்!

vinoth
சனி, 22 ஜூன் 2024 (07:45 IST)
நடிகர் சூர்யா சிறுத்தை சிவா இயக்கும் கங்குவா படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்து அவர் சுதா கொங்கரா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது. ஆனால் திடீரென்று அந்த படம் தள்ளிவைக்கப்பட்டதாக அறிவிக்கப்ப்பட்டது. ஆனால் அந்த படம் டிராப் செய்யப்பட்டுவிட்டதாக இப்போது சொல்லப்படுகிறது.

இதையடுத்து சூர்யா இப்போது கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்துவிட்டு அவர் பாலிவுட்டுக்கு செல்ல உள்ளதாக சொல்லப்பட்டது. அதன் பின்னர் அவர் வாடிவாசல் திரைப்படத்தில் நடிப்பார் என்றும் சொல்லப்பட்டது.

இதற்கு முன்னர் அவர் டிரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரவிகுமார் இயக்க ஒரு படத்தில் நடிப்பார் என்று சொல்லப்பட்டது. இதற்கான ஆரம்ப கட்ட வேலைகள் நடந்து வந்த நிலையில் இப்போது இந்த படம் கைவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் எடுத்த சமீபத்தைய சில படங்கள் படுதோல்வி அடைந்ததால் அவர்கள் பொருளாதார ரீதியாக சிக்கலில் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதனால் இந்த படத்தை தொடங்க முடியாத சிக்கல் எழுந்துள்ளதாம். இந்த படம் மட்டும் இல்லாமல் அவர்கள் தயாரிக்க இருந்த ரெயின்போ, கண்ணி வெடி ஆகிய படங்கள் கூட தொடங்கப்பட வாய்ப்பில்லை என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜீ.வி. பிரகாஷ் குமார் ஹாரர் திரைப்படமான 'பார்க்' தி படத்தின் பர்ஸ்ட் லுக்!

ரூ.100 கோடி வசூல் பட்டியலில் இணைந்த விஜய்சேதுபதியின் ‘மகாராஜா’.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

மருத்துவமனையில் அஜித் மனைவி ஷாலினி.. அவரே வெளியிட்ட புகைப்படம்..!

ரஜினியின் ‘கூலி’ படத்தில் இணைந்த பிரபலம்.. லோகேஷ் கனகராஜ் அறிவிப்பு..!

ஹாட் லுக்கிங் போட்டோ ஆல்பத்தைப் பகிர்ந்த திஷா பதானி!

அடுத்த கட்டுரையில்
Show comments