Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓடிடி தளத்தில் இருந்து நீக்கப்பட்ட சூர்யாவின் படம் – இதுதான் காரணமா?

Webdunia
செவ்வாய், 11 ஆகஸ்ட் 2020 (10:42 IST)
நடிகர் சூர்யா நடிப்பில் உருவான 24 திரைப்படம் அமேசான் ப்ரைமில் வெளியாகி இருந்த நிலையில் இப்போது அதில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

2016 ஆம் ஆண்டு வெளியான 24 படம் டைம் ட்ராவல் பற்றியது. ஆனால் அதில் டைம் டிராவல் பற்றிய அடிப்படை விஷயங்கள் கூட சரியாக காட்டப்படவில்லை எனக் கூறி விமர்சனங்கள் எழுந்தன. மேலும் அந்த விமர்சன ரீதியாக படமும் மிகப்பெரிய தோல்வியை தழுவியது. ஆனால் தமிழ் தெலுங்கு என இரு மொழிகளிலும் நல்ல வசூலைப் பெற்றது.

இந்நிலையில் இப்போது லாக்டவுன் சமயத்தில அந்த படம் அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியானது. ஆனால் திடீரென ஏனோ இப்போது அதில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. அதற்கான காரணம் என்னவென்றால் படம் அப்லோட் செய்யப்பட்டதில் இருந்து ஒலிப் பிரச்சனைகள் இருந்துள்ளன. மேலும் 24 என பெயர் இருப்பதால் தேடிக் கண்டுபிடிப்பதில் சிக்கல் உருவாகியுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த பிரச்சனைகள் தீர்ந்த பின்னர் மீண்டும் அப்லோட் செய்யப்படும் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

குக் வித் கோமாளி சீசன் 5.. முதல் எலிமினேஷன் இவரா? ஷாலின் ஜோயா எப்படி தப்பித்தார்?

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

அடுத்த கட்டுரையில்
Show comments