கருப்பு படத்தின் பட்ஜெட்டில் ஏற்பட்ட குளறுபடி.. தயாரிப்பாளர் அதிருப்தி!

vinoth
சனி, 20 செப்டம்பர் 2025 (10:54 IST)
கங்குவா மற்றும் ரெட்ரோ ஆகிய படங்களுக்குப் பிறகு சூர்யா ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை டிரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. சாய் அப்யங்கர் இசையமைக்கிறார். படத்தில் கதாநாயகியாக த்ரிஷா ஒப்பந்தம் ஆகியுள்ளார். மற்ற முக்கியக் கதாபாத்திரங்களில் நட்டி நட்ராஜ், ஸ்வாஸிகா மற்றும் ஆர் ஜே பாலாஜி உள்ளிட்டவர்கள் நடிக்கின்றனர்.

கோயம்புத்தூரில் முதல் கட்ட ஷூட்டிங் தொடங்கிய நிலையில் சென்னையில் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டு ஷூட் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் இன்று படத்தின் டைட்டில் மற்றும் முதல் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. படத்துக்கு ‘கருப்பு’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் ஓடிடி வியாபாரம் இன்னும் முடியாததால் ரிலீஸ் தேதி குறித்த குழப்பம் நிலவி வருகிறது.

இந்நிலையில் இந்த படத்துக்காகப் போடப்பட்ட பட்ஜெட்டை விட 25 கோடி ரூபாய் அதிகமாக செலவாகிவிட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் தயாரிப்பாளர் இயக்குனர் ஆர் ஜே பாலாஜி மேல் அதிருப்தியில் உள்ளதாக சொல்லப்படுகிறது.  கடந்த சில ஆண்டுகளாக சூர்யா தொடர்ந்து தோல்விப் படங்களாகக் கொடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

எல்லை மீறிய ‘கோட்’ பட இயக்குனர்.. திவ்யபாரதி பகீர் குற்றச்சாட்டு..

லெஜெண்ட் சரவணாவை இயக்கும் ரத்னகுமார்! வைரலாகும் புகைப்படம்

பீகார் தேர்தல் தோல்விக்கு பிராயசித்தம்: மெளன விரதம் இருக்கும் பிரசாந்த் கிஷோர்!

அழகுப் பதுமை சம்யுக்தாவின் அழகிய புகைப்படத் தொகுப்பு!

அழகே அழகே… வாணி போஜனின் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments