சென்னையில் புதிதாக வீடு கட்டும் சூர்யா- ஜோதிகா தம்பதியினர்!

vinoth
திங்கள், 30 ஜூன் 2025 (14:10 IST)
தமிழில் பிரபல கதாநாயகியாக இருந்த ஜோதிகா, சூர்யாவை திருமணம் செய்துகொண்ட பிறகு, சில ஆண்டுகள் சினிமாவில் நடிக்காமல் விலகி இருந்தார். ஆனால் அதன் பின்னர் 36 வயதினிலே படத்தின் மூலம் திரும்பவும் நடிக்க வந்த அவர் பல படங்களில் நடித்தார். சில மாதங்களுக்கு முன்னர் மலையாளத்தில் மம்மூட்டி ஜோடியாக காதல் என்ற திரைப்படத்தில் நடித்தார். அந்த படம் அவரின் நடிப்புக்கு பாராட்டுகளைப் பெற்று தந்தது.

இதையடுத்து பாலிவுட்டில் ஷைத்தான் மற்றும் டப்பா கார்டல் ஆகிய படங்களில் நடித்தார். இதையடுத்து சூர்யா மற்றும் ஜோதிகா குடும்பத்தோடு மும்பையில் செட்டில் ஆனார்கள். இதற்குக் காரணம் சிவகுமாருக்கும் ஜோதிகாவுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுதான் என்று சொல்லப்பட்டது. ஆனால் ஜோதிகா தரப்போ, தங்கள் பெற்றோரோடு சேர்ந்து இருப்பதற்காகவும், குழந்தைகளின் கல்விக்காகவும் மும்பையில் தற்காலிகமாகக் குடியேறியதாகவும் சொல்லப்பட்டது.

அதன் பிறகு ஜோதிகா சென்னைக்கு வந்தாலும் அவர் சூர்யா வீட்டில் தங்காமல் ஹோட்டல்களில்தான் தங்குகிறார் என்று கிசுகிசுக்கள் பரவின. இந்நிலையில் இப்போது சென்னை கிழக்குக் கடற்கரை சாலையில் சூர்யா புதிதாக வீடு கட்ட உள்ளதாக சினிமா பத்திரிக்கையாளர் பிஸ்மி தெரிவித்துள்ளார். 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

திருமணம் செய்ய வேண்டாம் என பேத்திக்கு அறிவுரை கூறுவேன்: அமிதாப் மனைவி ஜெயா பச்சன்..!

உண்மை தெரிந்திருந்தால் மோகன் ஜி படத்தில் பாடியிருக்க மாட்டேன்: பாடகி சின்மயி

சமந்தா திருமணம் யோக விஞ்ஞானத்தின் அடிப்படையில் நடந்தது ஏன்? பரபரப்பு தகவல்..!

திருமண புகைப்படங்களை வெளியிட்ட சமந்தா.. குவியும் வாழ்த்துக்கள்

வாழவைத்த தமிழ் சினிமா! விருது வாங்கிய ரஜினிக்கு கோலிவுட் கொடுத்த கிஃப்ட்

அடுத்த கட்டுரையில்
Show comments