Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூர்யாவின் கங்குவா திரைப்படமும் இரண்டு பாகங்களாக உருவாகிறதா?

Webdunia
சனி, 29 ஏப்ரல் 2023 (14:46 IST)
சூர்யா 42 படத்தை சிறுத்தை சிவா இயக்கி வருகிரார்.  இந்த கதை நிகழ்காலம் மற்றும் அரச காலத்து கதை என இரு காலகட்டங்களில் நடக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. படத்தின் மோஷன் டீசர் ஒன்றை வெளியிட்டு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார் சிறுத்தை சிவா. இந்நிலையில் தற்போது படத்தின் டைட்டில் “கங்குவா” என பெயரிடப்பட்டுள்ளது.

சிறுத்தை சிவா இயக்கும் இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரபல இந்தி நடிகை திஷா பதானி நடிக்கிறார். தேவிஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார். இந்த படம் தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட 10 மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் தயாராகிறது, சூர்யா நடிக்கும் முதல் 3டி தொழில்நுட்ப படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் “கங்குவா” டைட்டில் டீசரை ஸ்டுடியோ க்ரீன் தனது யூட்யூப் சேனலில் வெளியிட்டுள்ள நிலையில் அது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில் இப்போது பரவலான ட்ரண்டாக இருக்கும் இரண்டு பாகங்களாக படத்தை ரிலீஸ் செய்வதை போல, இந்த படத்தையும் இரண்டு பாகங்களாக உருவாக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments