Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூர்யா தேவிக்கும் பிக்பாஸ் ஆசையா ? மீண்டும் வீடியோ வெளியிட்டு சர்ச்சை!

Webdunia
புதன், 19 ஆகஸ்ட் 2020 (10:50 IST)
வனிதா திருமண விஷயத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி கைதான சூர்யா தேவி இப்போது மீண்டும் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

வனிதா திருமணம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்த சூர்யா தேவி மீது காவல்துறையில் வனிதா புகார் கொடுத்திருந்தார் என்பதும், இந்த புகாரின் அடிப்படையில் சமீபத்தில் சூர்யாதேவி கைது செய்யப்பட்டார் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் நடிகை கஸ்தூரி உள்பட ஒரு சிலரின் உதவியால் சூர்யாதேவி ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில் கொஞ்ச காலமாக எந்த வீடியோவும் வெளியிடாமல் இருந்த சூர்யா தேவி சமீபத்தில் மீண்டும் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். இதன் மூலம் மீண்டும் பரபரப்புகளைக் கிளப்பி எப்படியாவது பிக்பாஸ் வீட்டுக்குள் போட்டியாளராக ஆகிவிட வேண்டும் என்ற ஆசையில்தான் இப்படி செய்வதாக சொல்லப்படுகிறது. இதனால் அவரிடம் இருந்து மேலும் சில வீடியோக்களும் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுபோல கடந்த பிக்பாஸ் சீசன் தர்ஷனின் முன்னாள் காதலியான சனம் ஷெட்டி கூடா மீரா மிதுனுக்கு எதிராக வீடியோ ஒன்றை வெளியிட்டு கவனத்தை ஈர்க்க முயற்சி செய்து வருகிறார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

டி.ராஜேந்தர் வாய் இசையில் ‘கூலி’ படத்தில் பாடல்? - சர்ப்ரைஸ் கொடுத்த ப்ரோமோ வீடியோ!

விடுதலை 2 ஊடக விமர்சனம்: வெற்றிமாறனின் கம்யூனிச கையேடா? படம் எப்படி இருக்கிறது?

முஃபாசா படத்துக்கு பூனைக்குட்டியா? மகேஷ் பாபு ரசிகர்கள் அட்டகாசம்!

கடைசி நேரத்தில் விடாமுயற்சி படத்தில் இணைந்த பிரபலம்.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

அம்பேத்கர் குறித்து அமித்ஷா பேசியது கண்டனத்துக்குரியது: இயக்குனர் வெற்றிமாறன்

அடுத்த கட்டுரையில்