பாலா- சூர்யா படத்தில் வெளிநாட்டு நடிகர்கள்… வெளியான தகவல்!

Webdunia
வியாழன், 12 மே 2022 (15:28 IST)
பாலா சூர்யா இணையும் படத்தின் முதல் கட்ட ஷூட்டிங் சமீபத்தில் நடந்து முடிந்தது.

இயக்குனர் பாலா இயக்கத்தில் கடைசியாக வெளியான திரைப்படம் நாச்சியார். அதன் பிறகு அவர் இயக்கிய வர்மா திரைப்படம் தயாரிப்பாளரோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்த படத்தைக் கிடப்பில் போட்டுவிட்டு வேறொரு இயக்குனரை வைத்து முழுப் படத்தையும் எடுத்து ரிலீஸ் செய்தனர். இதையடுத்து இயக்குனர் பாலாவின் அடுத்த படம் குறித்த எதிர்பார்ப்பு இருந்த நிலையில் சூர்யா, அவர் இயக்கத்தில் நடித்து அந்த படத்தை தயாரிக்கவும் உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து 34 நாட்கள் கன்னியாகுமரியில் முதல் கட்ட படப்பிடிப்பு நடந்தது. இந்நிலையில் படப்பிடிப்புத் தளத்தில் சூர்யாவுக்கும் பாலாவுக்கும் இடையே மோதல் எழுந்து, சூர்யா அங்கிருந்து வெளியேறியதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் அது உண்மையில்லை என்று தயாரிப்பு தரப்பு விளக்கம் அளித்தது.

இந்நிலையில் இந்த படப்பிடிப்பில் நிறைய வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் நடித்துள்ளார்களாம். படத்தின் கதைப்படி சுற்றுலாப் பகுதியான கன்னியாகுமரியில் கதாநாயகியான கீர்த்தி ஷெட்டி டூரிஸ்ட் கைடாக நடிக்கிறாராம். அது சம்மந்தமானக் காட்சிகளுக்காக வெளிநாட்டு நபர்களை அதிகளவில் நடிக்க வைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

Sourc Valaipechu

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சாதிச்சுப்புட்டாரே.. இளையராஜாவுக்கு இழப்பீடு வழங்கிய ‘ட்யூட்’ பட நிறுவனம்

முதல் பாகத்தில் செத்து போன கேரக்டர் எப்படி இரண்டாம் பாகத்தில்? ‘ஜெயிலர் 2’ படத்தில் விநாயகன்?

தனுஷ், ஸ்ரேயாஸ் ஐயர்.. யாரை காதலிக்கிறார் மிருணாள் தாக்கூர்? பரபரப்பான இன்ஸ்டா பதிவு..!

ஜப்பானில் வெளியாகும் ‘புஷ்பா 2’.. ஜப்பான் மொழியில் புதிய டிரைலர் வெளியீடு!

ரிலீஸுக்கு முன்பே கோடியை அள்ளிய ‘ஜனநாயகன்’.. ஆனால் அதிலும் ஒரு சிக்கல்

அடுத்த கட்டுரையில்
Show comments