Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் இணைந்து நடிக்கும் சூர்யா ஜோதிகா? எந்த படத்தில் தெரியுமா?

Webdunia
வியாழன், 3 மார்ச் 2022 (09:26 IST)
சூர்யா இயக்குனர் பாலா இயக்கும் புதிய படத்தில் நடித்து தயாரிக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.

இயக்குனர் பாலா இயக்கிய ரீமேக் படமான வர்மா சில காரணங்களால் தயாரிப்பாளர்களுக்கு பிடிக்காமல் போகவே கிடப்பில் போடப்பட்டு, வேறொரு இயக்குனரால் மீண்டும் படமாக்கப்பட்ட ரிலிஸ் செய்யப்பட்டது. ஒரு மூத்த இயக்குனருக்கு இப்படியான நிகழ்வு நடந்தது ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.

அதையடுத்து தனது அடுத்த படத்தை எப்படியாவது ஹிட் ஆக்கிவிட வேண்டும் என்பதற்காக வேலைகளில் இறங்கியுள்ளார் பாலா. அந்த படத்தில் கதாநாயகனாக சூர்யா நடிக்க உள்ளார். மேலும் அந்த படத்தை அவரே தயாரிக்கவும் உள்ளார். இதற்கான முன் தயாரிப்புப் பணிகள் இப்போது நடந்துவரும் நிலையில் இந்த படத்தை பற்றிய ஒரு சுவாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது.

இந்த படத்தில் சூர்யாவோடு ஜோதிகாவும் இணைந்து நடிக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. இவர்கள் இருவரும் திருமணத்துக்கு முன்னர் பல படங்களில் நடித்துள்ளனர். ஜோதிகா சினிமாவில் திரும்ப நடிக்க வந்து சில படங்களில் நடித்திருந்தாலும், இன்னும் சூர்யாவோடு நடிக்கவில்லை. இது சம்மந்தமாக ரசிகர்கள் இருவரும் இணைந்து நடிக்கவேண்டும் என்ற ஆசையை வெளிப்படுத்தி வந்தனர். ரசிகர்களின் அந்த ஆசை பாலா படத்தின் மூலமாக நிறைவேற அதிக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அஜித் போலவே பெட்டியை தூக்கிட்டு கிளம்பும் ராஷ்மிகா மந்தனா.. தனுஷ் படத்தின் அப்டேட்..!

63 வயது பிரபல நடிகரின் மனைவியாகும் ஐஸ்வர்யா ராஜேஷ்.. வைரல் புகைப்படம்..!

ஹோம்லி ட்ரஸ்ஸில் ரைசா வில்சனின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

கருப்பு நிற ட்ரஸ்ஸில் காஜல் அகர்வாலின் கார்ஜியஸ் போட்டோஷூட்!

இந்தியன் 2 படத்தின் ரிலீஸ் தேதி இல்லாமல் வெளியாகும் போஸ்டர்கள்… இதுதான் காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments