Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு நாளில் ஒரு கோடி பேரால் பார்க்கப்பட்ட சூர்யாவின் ‘ரெட்ரோ’ பட டீசர்!

Webdunia
வியாழன், 26 டிசம்பர் 2024 (12:25 IST)
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ரெட்ரோ’ எனும் திரைப்படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், நாசர், சுஜித் சங்கர், தமிழ், பிரேம்குமார், ரம்யா சுரேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

இந்த திரைப்படத்தை 2 டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் ஜோதிகா - சூர்யா ஆகியோருடன் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் புரொடக்ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. படத்தின் ஷூட்டிங் முடிந்து தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில் நேற்று இந்த படத்தின் அறிமுக டீசர் வெளியாகி கவனம் பெற்றது. காதல் மற்றும் ஆக்‌ஷன் கதைக்களமாக படம் இருக்கும் என்பதை டீசர் காட்டியது. இந்நிலையில் வெளியான ஒரு நாளில் ஒரு கோடி பேரால் இந்த டீசர் பார்க்கப்பட்டுள்ளது. இதைப் பகிர்ந்து படக்குழு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அஜித் 64: திரைவாழ்வைத் தொடங்கிய நாளில் அடுத்த பட அப்டேட்.!

நான்கே வாரத்தில் நெட்ளிக்ஸில் சத்தமில்லாமல் ரிலீஸானது ‘தக் லைஃப்’…!

கிறிஸ்டோஃபர் நோலனின் ‘தி ஒடிசி’ டீசர் இணையத்தில் கசிந்தது.. படக்குழுவினர் அதிர்ச்சி!

சண்முக பாண்டியன் நடிக்கும் கொம்பு சீவி படப்பிடிப்பு நிறைவு.. படக்குழு வெளியிட்ட மேக்கிங் வீடியோ!

தெலுங்கு படத்தில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டாரா ஸ்ருதிஹாசன்?

அடுத்த கட்டுரையில்
Show comments