Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் கல்லூரி மாணவர் வேடத்தில் சூர்யா!

Webdunia
சனி, 14 அக்டோபர் 2023 (15:02 IST)
நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கும் கங்குவா படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் பெரும்பாலான ஷூட்டிங் முடிவடைந்துள்ள நிலையில்  விரைவில் அவர் சுதா கொங்கரா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தையும் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமே தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த படத்தில் துல்கர் சல்மான் மற்றும் நஸ்ரியா ஆகிய இருவரும் நடிக்க பேச்சுவார்த்தைகள் நடப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் மாதவன் உள்ளிட்டவர்களும் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இப்போது கங்குவா படத்தின் இறுதிகட்ட ஷூட்டிங் தாய்லாந்தில் நடந்து வரும் நிலையில் இந்த மாதத்தோடு முடியவுள்ள நிலையில், நவம்பர் மாதத்தில் சூர்யா சுதா கொங்கரா படம் தொடங்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த படத்தில் அயன் படத்துக்கு பிறகு சூர்யா கல்லூரி மாணவர் வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்காக சூர்யா உடல் எடையைக் குறைக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சேது படத்தை நான் திரும்ப பார்க்கவே மாட்டேன்… இயக்குனர் பாலா சொன்ன காரணம்!

பென்ஸ் படத்தின் தாமதத்தால் காஞ்சனா படத்தில் கவனம் செலுத்தும் ராகவா லாரன்ஸ்!

விடாமுயற்சி தள்ளி வைக்கப்பட்டதால் பொங்கலுக்கு வருகிறதா விக்ரம்மின் ‘வீர தீர சூரன்’?

நல்லவங்களை ஆண்டவன் சோதிப்பான்… ஆனா கைவிட மாட்டான் –பன்ச்சாக புத்தாண்டு வாழ்த்து சொன்ன ரஜினி!

ரீமேக் உரிமை தொடர்பான சிக்கலால்தான் விடாமுயற்சி ரிலீஸ் தள்ளிப் போனதா?

அடுத்த கட்டுரையில்
Show comments