சூர்யா விஜய்சேதுபதி நடிக்கும் ‘நடு செண்டர்’- புதிய வெப் தொடர்!

Webdunia
புதன், 27 செப்டம்பர் 2023 (07:52 IST)
நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி சிந்துபாத் திரைப்படத்தில் நடித்திருந்தார். ஆனால் அந்த படம் பெரியளவில் ஓடாததால் அதன் பிறகு நடிப்புக்கு ஒரு இடைவெளி விட்டார். இப்போது விடுதலை 2 படத்தில் அவர் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இதற்கிடையில் சூர்யா அனல் அரசு இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருவதாகவும் சொல்லப்பட்டது. இப்போது அவர் நடு செண்டர் என்ற ஒரு வெப் தொடரில் நடித்து வருகிறார். இந்த தொடரில் நடிகர் கலையரசனும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

விரைவில் இந்த வெப் தொடர் பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மகேந்திரன் பற்றி சொன்னதுல என்ன தப்பு? ராஜகுமாரனுக்காக வக்காளத்து வாங்கும் பயில்வான் ரங்கநாதன்

கார்த்தியின் ’வா வாத்தியாரே’ படத்தின் ரிலீஸ் எப்போது? தேதியை அறிவித்த படக்குழு!

நயன்தாரா நடிக்கும் படத்தில் கெமி.. பிக்பாஸ் வீட்டை இருந்து வெளியேறியதும் கிடைத்த வாய்ப்பு..!

ஒரு சிறிய புள்ளியில் நாம் வாழ்கிறோம்.. சமந்தா புதிய கணவரின் முன்னாள் மனைவியின் பதிவு..!

’காந்தாரா’ படத்தின் பெண் தெய்வத்தை கேலி செய்தாரா? மன்னிப்பு கேட்ட ரன்வீர் சிங்

அடுத்த கட்டுரையில்
Show comments