Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கமலின் ‘விக்ரம்’ படத்தில் சூர்யாவும் இருக்காரா? லோகேஷின் மாஸ்டர் பிளான்!

Webdunia
வியாழன், 12 மே 2022 (08:48 IST)
கமல்ஹாசன் விஜய் சேதுபதி பகத் பாசில் உள்பட பலர் நடித்த விக்ரம் திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இந்த படம் வரும் ஜுன் மாதம் 3 ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்த படத்துக்கும் அனிருத் இசையமைத்துள்ளார். கமல் நடிப்பில் நான்காண்டுகளுக்குப் பிறகு ரிலீஸ் ஆகும் முதல் படமாக விக்ரம் உருவாகி வருகிறது. படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் ஆகியவை ஒரே நாளில் மே 15 ஆம் தேதி ரிலீஸாக உள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது நிகழ்வு சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படம் சிறைச்சாலையில் இருந்து சில கைதிகள் தப்பிப்பதைப் பற்றிய படம் என்றும் அதில் ஒய்வு பெற்ற காவல் அதிகாரியாக கமல்ஹாசன் நடித்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் சிறைச்சாலை பற்றிய காட்சிகளில் ஒரு சிறு கௌரவ வேடமாக கைதி படத்தில் டில்லி வேடத்தில் நடித்த கார்த்தி அதே கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதைப் படக்குழு சீக்ரெட்டாக வைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இதையடுத்து தற்போது மற்றொரு சர்ப்ரைஸாக ரத்த சரித்திரம் படத்தில் சிறைச்சாலையில் கைதியாக இருக்கும் சூர்யாவின் கதாபாத்திரம் சிறை சம்மந்தப்பட்ட காட்சிகளில் இடம்பெற்றுள்ளதாக சொல்லப்படுகிறது. ஒரு படத்தில் இடம்பெற்ற புகழ்பெற்ற காட்சிகளையோ அல்லது கதாபாத்திரங்களையோ வேறொரு படத்தில் இடம்பெறச் செய்வது cross over, spin off என சினிமா உலகில் சொல்லப்படுவது உண்டு.  விக்ரம் படத்தில் இதுபோல சூர்யா, கார்த்தி சம்மந்தப்பட்ட காட்சிகள் இடம்பெறுகிறது என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தேவதை வம்சம் நீயோ… திஷா பதானியின் கலர்ஃபுல் க்ளிக்ஸ்!

ரிலீஸுக்கு ஒரு ஆண்டுக்கு முன்பே 130 கோடி ரூபாய் சம்பாதித்த நோலனின் ‘ஒடிசி’!

பிரபாஸின் ‘ஸ்பிரிட்’ படத்துக்கு இசையமைக்கிறாரா அனிருத்?

நடிப்பு சலிப்பை ஏற்படுத்தினால் uber ஓட்டுனர் ஆகிவிடுவேன் – ஃபஹத் பாசில் பகிர்வு!

அடுத்த கட்டுரையில்
Show comments