Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூர்யா- சிறுத்தை சிவா படத்தின் ஷூட்டிங் எப்போது? சத்தமில்லாமல் நடக்கும் வேலைகள்!

Webdunia
வியாழன், 7 ஜூலை 2022 (15:16 IST)
சூர்யா சிறுத்தை சிவா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க பல வருடங்களுக்கு முன்பே ஒப்பந்தம் ஆனார்.

சிறுத்தை ரிலீஸ் ஆகி வெற்றி பெற்றவுடன் இயக்குனர் சிவா –சூர்யா கூட்டணியில் ஒரு படத்துக்கான பேச்சுவார்த்தைத் தொடங்கியது. ஆனால் சிறுத்தை சிவாவுக்கு அப்போது அஜித்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்ததால் அந்த படம் தள்ளிப்போனது. அதன் பின்னர் 8 ஆண்டுகளுக்கும் மேலாக இருவரும் இணைய வாய்ப்பே கிடைக்கவில்லை. இந்நிலையில் இப்போது அண்ணாத்த படத்தை முடிந்துள்ள நிலையில் சிறுத்தை சிவா சூர்யா நடிக்கும் படத்தை இயக்க உள்ளார்.

சூர்யா இப்போது பாலாவின் புதிய படத்தில் நடிக்க சென்றுவிட்டார். அடுத்து வாடிவாசல் படமும் தொடங்க உள்ள நிலையில் சிறுத்தை சிவா படம் எப்போது தொடங்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பாக ஞானவேல் ராஜா தயாரிக்க இருந்த இந்த படத்தை தற்போது தில் ராஜு தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் மற்றொரு கருத்தாக தில் ராஜு பைனான்ஸ் மட்டுமே செய்ய உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் ஆகஸ்ட் இறுதியில் சென்னையில் தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் வெளிநாடுகளிலும் படத்தை படமாக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இதுபற்றி அறிவிப்பு விரைவில் வெளியாகும் என சொல்லப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

Breakdown இல்லாமல் இன்னொரு ஹாலிவுட் படத்தையும் ஆட்டையப் போட்டாங்களா… ரசிகர்கள் கருத்து!

விடாமுயற்சி படத்துக்கு ‘குட் பேட் அக்லி’ இயக்குனர் கொடுத்த ஒரு வரி விமர்சனம்!

அட திருந்த மாட்டாய்ங்க போலயே… மீண்டும் தலன்னு கூப்புடனுமாம்… மேனேஜரிடம் கோரிக்கை வைத்த ரசிகர்!

காதலர் தினத்தில் புதிய தொழில் ஆரம்பிக்கும் கங்கனா.. சிறுவயது கனவு நிறைவேற்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments