Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூர்யா- சிறுத்தை சிவா படத்தின் இசையமைப்பாளர் இவரா?... மீண்டும் இணையும் பழைய கூட்டணி

Webdunia
வெள்ளி, 19 ஆகஸ்ட் 2022 (09:09 IST)
பல ஆண்டுகளுக்கு முன்பே இயக்குனர் சிவா –சூர்யா கூட்டணியில் ஒரு படத்துக்கான பேச்சுவார்த்தைத் தொடங்கியது. ஆனால் சிறுத்தை சிவாவுக்கு அப்போது அஜித்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்ததால் அந்த படம் தள்ளிப்போனது. அதன் பின்னர் 8 ஆண்டுகளுக்கும் மேலாக இருவரும் இணைய வாய்ப்பே கிடைக்கவில்லை. இந்நிலையில் இப்போது அண்ணாத்த படத்தை முடிந்துள்ள நிலையில் சிறுத்தை சிவா சூர்யா நடிக்கும் படத்தை இயக்க உள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் தொடங்க உள்ளது. இந்நிலையில் சென்னையில் வரும் ஆகஸ்ட் 21 ஆம் தேதி படப்பிடிப்பு தொடங்குகிறது. இந்த படம் வரலாற்றுக் கதைக்களத்தைக் கொண்ட திரைப்படமாக உருவாக உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்துக்கு இசையமைப்பாளராக அனிருத் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இவர் ஏற்கனவே சிவாவின் விவேகம் மற்றும் வேதாளம் ஆகிய படங்களுக்கு இசையமைத்தவர். அதுபோல சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் படத்துக்கும் இசையமைத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

அடுத்த கட்டுரையில்
Show comments