Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அஜித்தை சந்தித்த போது இந்த ரகசியத்தை சொன்னார்: ‘கங்குவா’ புரமோஷனில் சூர்யா..!

Siva
செவ்வாய், 22 அக்டோபர் 2024 (19:19 IST)
நடிகர் அஜித்தை அண்மையில் சந்தித்ததாகவும், அப்போது அஜித் ஒரு ரகசியத்தை கூறியதாகவும், "இப்போ புரியுதா, நான் ஏன் அவரை விடவில்லை என்று?" என சூர்யா கூறினார். இந்த கருத்தை அவர் சமீபத்தில் கங்குவா புரமோஷனில் அளித்த பேட்டியில் பகிர்ந்துள்ளார்.
 
சூர்யா நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள 'கங்குவா' திரைப்படம் வரும் நவம்பர் 14ஆம் தேதி வெளியாக உள்ளது. இதற்கான ப்ரமோஷன் பணிகள் நாடு முழுவதும் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன. சூர்யா மற்றும் படக்குழுவினர் மும்பை, டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் ப்ரமோஷனில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
 
இந்த நேரத்தில், சூர்யா வட இந்திய ப்ரமோஷன் பணிகளின் போது அளித்த பேட்டியில், அண்மையில் அஜித்தை சந்தித்த போது, அஜித், "இப்போ தெரியுதா, நான் ஏன் சிவா சாரை விடவில்லை என்று?" எனக் கூறியதாகவும், அஜித் சிவா இயக்கத்தில் உருவான படங்களில் நிறைந்த மகிழ்ச்சியுடன் நடித்தார் என்றும், அந்தப் படங்கள் திரையில் வெற்றிகரமாக கொண்டாடப்பட்டதாகவும் கூறினார்.
 
சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் இதுவரை 'வீரம்', 'வேதாளம்', 'விவேகம்', 'விஸ்வாசம்' போன்ற நான்கு படங்களில் நடித்துள்ளார். இதற்கு கூடுதலாக, தற்போது அஜித் 'விடாமுயற்சி' மற்றும் 'குட் பேட் அக்லி' ஆகிய படங்களில் பணியாற்றி வருகிறார், மேலும் மீண்டும் சிவா உடன் இணைந்து ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார் என்று செய்திகள் கூறுகின்றன.
 
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

4 நாட்கள் தொடர் விடுமுறையில் ரிலீஸ் ஆகும் ‘கூலி’.. சன் பிக்சர்ஸ் அதிகாரபூர்வ அறிவிப்பு..!

ஜொலிக்கும் அழகில் மிரட்டல் போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!

பாக்ஸிங் க்யூட்டி ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!

இந்த படத்தை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்க போராடினேன்… வீர தீர சூரன் ஹிட் குறித்து விக்ரம் மகிழ்ச்சி!

மூத்த நடிகர் அவர்கள் ரவிகுமார் காலமானார்… திரையுலகினர் அஞ்சலி!

அடுத்த கட்டுரையில்
Show comments