Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூர்யாவின் எஸ்3 ஜனவரி 26 ரிலீஸாகும்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Webdunia
வியாழன், 22 டிசம்பர் 2016 (10:07 IST)
ஹரி இயக்கத்தில் சூர்யாவின் எஸ் 3 படம் ஒரு வழியாக ஜனவரி மாதம் 26ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தில் சூர்யா, அனுஷ்கா, ஸ்ருதி ஹாஸன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். எஸ் 3 டிசம்பர் மாதம் 16ம் தேதி ரிலீஸாகும் என்றார்கள். அதன் பிறகு ரிலீஸ் தேதியை டிசம்பர் 23ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்கள்.


 
 
இந்நிலையில் தற்போது எஸ் 3 படம் நிச்சயமாக ஜனவரி மாதம் 26ம் தேதி ரிலீஸாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே எஸ் 3 பொங்கலுக்கு ரிலீஸாகும் என்று கூறப்பட்ட நிலையில் ரிலீஸ் தள்ளிப் போனது பெரிய நன்மைக்கு என்று சூர்யா ட்விட்டரில் தெரிவித்திருந்தார். 
 
26ம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு விடுமுறை, வெள்ளி ஒரு நாள் பணி நாள், அடுத்து சனி, ஞாயிறு விடுமுறை. இதை வைத்து வசூலை அள்ளவிடலாம் என்று நினைத்திருப்பார்கள் போல, எஸ் 3 படம் தமிழ் மற்றும் தெலுங்கிலும் ஒரே நாளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடதக்கது.
 
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கிளாமர் லுக்கில் ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்ட் போட்டோஷூட் தொகுப்பு!

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

லப்பர் பந்து படத்தில் தினேஷின் நடிப்பைப் பார்த்து மிரண்டுவிட்டேன்… இயக்குனர் ஷங்கர் பாராட்டு!

விக்ரம் படத்தை நிராகரித்த சாய் பல்லவி… காரணம் என்ன?

ப்ளாக்பஸ்டரா? கேம் ஓவரா? குவிந்து வரும் விமர்சனங்கள்! - எப்படி இருக்காம் கேம் சேஞ்சர்?

அடுத்த கட்டுரையில்
Show comments