Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’ஜப்பான் மேட் இன் இந்தியா.. வித்தியாசமான முயற்சி''- கார்த்தியை பாராட்டிய சூர்யா

Webdunia
வியாழன், 25 மே 2023 (17:44 IST)
நடிகர் கார்த்தியின் ஜப்பான் படத்தின் புதிய புரொமோ இன்று வெளியாகியுள்ளது. இதை வித்தியாசமான முயற்சி என்று நடிகர் சூர்யா பாராட்டியுள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் கார்த்தி. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான விருமன், சர்தார், பொன்னியின் செல்வன்-1-2 ஆகிய படங்கள் வெற்றி பெற்றன.

இதையடுத்து, கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள படம் ஜப்பான். இது கார்த்தியின் 25 ஆவது படமாகும்.  இந்த படத்தை இயக்குனர் ராஜுமுருகன் இயக்க, ஜிவி பிரகாஷ் இசையமைக்க எஸ்ஆர் பிரபு தயாரித்து வருகிறார். இப்படத்தில் கார்த்தி ஜோடியாக இமானுவேல் கதாநாயகியாக நடித்துள்ளார்.

இன்று கார்த்தியின் பிறந்தநாளை முன்னிட்டு ஜப்பான்  படத்தில் கார்த்தியின் கதாபாத்திரத்தைப் பற்றிய ‘யார் ஜப்பான்’ என்ற ப்ரமோஷன் வீடியோ தமிழ், கன்னடம்,மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் வெளியாகி வைரலாகி வருகிறது.

இப்படத்தில் கார்த்தி வித்தியாசமான கெட்டப்பில் நடித்துள்ளார்.  இதுகுறித்து, தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும் கார்த்தியின் சகோதரருமான சூர்யா தன் டுவிட்டர் பக்கத்தில், ‘’ஜப்பான் மேட் இன் இந்தியா... இந்த டீசர் அருமையாக உள்ளது. முற்றிலும் வித்தியாசமான முயற்சி தம்பி’’ என்று பாராட்டியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஆஸ்கர் போட்டியில் இருந்து வெளியேறியது இந்தியாவின் ‘லாபட்டா லேடீஸ்’!

புஷ்பா படம் பார்க்க சென்று நெரிசலில் சிக்கிய சிறுவனின் உடல்நிலைக் கவலைக்கிடம்..!

என்னுடைய அடுத்த படத்தில் பல ஆச்சர்யங்கள் காத்திருக்கின்றன… அட்லி கொடுத்த அப்டேட்

பொங்கலுக்கு வருகிறது சிவகார்த்திகேயனின் அடுத்த பட டைட்டில் டீசர்!

அல்லு அர்ஜுன் கைதுக்குக் காரணமான கடிதம்… ஜாமீனை ரத்து செய்ய மேல்முறையீடா?

அடுத்த கட்டுரையில்
Show comments